9 பிப்., 2010

செப்டம்பர்-11 விசாரணை நியூயார்க்கில்தான்: ஒபாமா

வாஷிங்டன்:செப்டம்பர்-11 தாக்குதல் தொடர்பான விசாரணை நியூயார்க்கில் தான் நடைபெறும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதலில் முக்கிய குற்றவாளி என அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்படும் காலித் ஷேக் முஹம்மது உட்பட்டவர்களுக்கான விசாரணை நியூயார்க்கில் நடத்துவது பற்றி பாதுகாப்பு பிரச்சனை எடுத்துக் காட்டப்பட்டாலும் விசாரணை நியூயார்க்கில் தான் நடைபெறும் என ஒபாமா சி.பி.எஸ் நியூஸிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி போலீஸும் மேயரும் தொழில்துறையை சார்ந்தவர்களும் விசாரணையை எதிர்க்கும்பொழுது அதனை புறக்கணிக்க இயலாவிட்டாலும், விசாரணையை மேற்க்கொள்ளாமல் பின்வாங்க அரசால் இயலாது என ஒபாமா தெரிவித்தார்.பாதுகாப்பு பிரச்சனையும், தொழில்துறையை சார்ந்தோரின் எதிர்ப்பும் காரணமாக விசாரணையை நியூயார்க்கிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நியூயார்க் மேயர் கோரியிருந்தார்.

விசாரணையை நியூயார்க்கில் நடத்துவதற்கு டெமோக்ரேட் கட்சியினர் மட்டுமல்லாமல் ஒபாமாவின் குடியரசுக்கட்சியனரும் எதிர்க்கின்றனர். அதேவேளையில் விசாரணையை நியூயார்க்கிலேயே நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒபாமா மேற்க்கொண்டு வருகின்றார்.

நியூயார்க்கிலிருந்து வேறொரு இடத்திற்கு விசாரனையை மாற்றினாலும் இதே பிரச்சனைகள் ஏற்படும் என்பது ஒபாமாவின் வாதம். விசாரணைத் தொடர்பாக அமெரிக்க சட்டத்துறை இந்த வாரம் தீர்மானமெடுக்கும் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "செப்டம்பர்-11 விசாரணை நியூயார்க்கில்தான்: ஒபாமா"

கருத்துரையிடுக