9 பிப்., 2010

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களை கைதுச்செய்த எகிப்து அரசு

கெய்ரோ:எகிப்தில் பிரபல எதிர்கட்சியும் இஸ்லாமிய இயக்கமுமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் மூன்று மூத்த தலைவர்கள் உட்பட 13 பேரை எகிப்திய போலீஸ் கைதுச்செய்துள்ளது.
மஹ்மூத் இஸ்ஸத், எஸ்ஸாம் எல் எரியான், அப்துற்றஹ்மான் அல் பர் ஆகியோர்தான் கைதுச் செய்யப்பட்ட முக்கியத் தலைவர்கள். தடைச் செய்யப்பட்ட இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் இவர்கள் அரசியல் ரீதியான தொடர்பை வைத்திருந்ததாகத்தான் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் முன்னிட்டு எகிப்தின் ஒரே எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை ஒதுக்கித்தள்ளுவதற்கான நடவடிக்கைதான் இந்த கைது என்று முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடைச்செய்யப்பட்டாலும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கடந்த 2005 ஆம் ஆண்டில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்தி 5இல் ஒரு பகுதி இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எகிப்திய அரசு மேற்க்கொண்டு வருகிறது. தடைச் செய்யப்பட்ட பிறகும் கூட அரசுக்கெதிரான போராட்டங்களில் பொதுமக்களை ஒன்றிணைக்க முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு வலு உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களை கைதுச்செய்த எகிப்து அரசு"

கருத்துரையிடுக