அங்காரா:ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த மக்களுக்குரியது. ராணுவ நடவடிக்கையின் மூலம் ஆப்கான் பிரச்சனையை தீர்க்க இயலாது என துருக்கி அதிபர் அப்துல்லா குல் தெரிவித்தார்.
நேட்டோ நாடுகளின் இரண்டு நாள் மாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர். நேட்டோ கூட்டுப்படையினர் ஆப்கானின் நாகரீகத்தையும், பாரம்பாரியத்தையும், உடைமைகளையும் மாற்றுவதற்கு அங்கு செல்லாதீர்கள். இதனை புரிந்துக்கொண்டால் தீவிரவாத மிரட்டல்களை தனிமைப்படுத்தி எளிதில் வெற்றிப் பெறலாம்.
ஒன்றரைக்கோடி ஆப்கான் குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தை சுட்டிக்காட்டிய குல் தொழில்,ஆரோக்கியம் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் உறுதிக்கான முக்கியத்துவத்தையும் சக நாடுகளை குல் நினைவுப்படுத்தினார். தீவிரவாதத்தையும், குழு ரீதியான குற்றங்களையும் தடுப்பதற்கு ஆப்கான் படையினருக்கு போதிய பயிற்சி அளிப்பது அவசியம் என்றும் குல் குறிப்பிட்டார்.
அதே வேளையில் 2004 ஆம் ஆண்டு 400 க்கும் குறைவாகவிருந்த தாலிபான் போராளிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கிடையில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாக நேட்டோ படைகளின் தலைவர் ஆண்டேர்ஸ் ரஸ்மூஸன் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்ப்பொழுது ஒரு லட்சம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையினர் உள்ள ஆப்கானில் அமெரிக்கா 30 ஆயிரமும், நேட்டோ 10 ஆயிரமும் அதிக படையினரை அனுப்புவதோடு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையினரின் எண்ணிக்கை 1,40,000 ஆக உயரும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ராணுவ நடவடிக்கையின் மூலம் ஆப்கான் பிரச்சனையை தீர்க்க இயலாது: துருக்கி அதிபர்"
கருத்துரையிடுக