சாண்டியாகோ:மத்திய சிலியை பிடித்து உலுக்கிய கடுமையான பூகம்பத்தால் 147 பேர் மரணமடைந்தனர். தலைநகரான சாண்டியாகோவிலிருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள தென்மேற்கு பகுதிதான் ரிக்டர் ஸ்கேலில் 8.8 பதிவான பூகம்பம் உருவான மையம்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் மிஷேல் பாஷ்லட் பேரிடர் துயர பகுதிகளாக அறிவித்தார். சுனாமி பீதியைத் தொடர்ந்து ஈஸ்டர் தீவில் பொதுமக்கள் உயர்ந்த பிரதேசங்களை நோக்கி செல்லத் துவங்கியுள்ளனர்.

பூகம்பத்தைத் தொடர்ந்து சாண்டியாகோ விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களும் ரத்துச் செய்யப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் அர்ஜண்டினாவின் மெண்டோஸாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கிடையே சிலியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பம்தான் நேற்று நிகழ்ந்தது.
மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆரம்ப கணக்கீடு என்றும் மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது எனவும் அதிபர் பாஷ்லட் கூறினார். பூகம்பம் உருவான இடத்தின் அருகிலிலுள்ள பராலில்தான் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாண்டியாகோ உள்ளிட்ட இடங்களிலிலுள்ள ஏராளமான மருத்துவமனைகள் காலிச் செய்யப்பட்டன.
பூமி அதிர்வு இரண்டு நிமிடங்கள் நீடித்ததாக பூகம்பம் உருவான மையத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலிலுள்ள சிலானிலிலுள்ள ஒரு நபர் தொலைக்காட்சி சானல்களிடம் தெரிவித்தார். சாண்டியாகோவில் 30 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எட்டு தொடர் அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்காவின் ஜியாலஜிகள் சர்வே தெரிவிக்கிறது. சாண்டியாகோவிற்கு மேற்கிலிலுள்ள வால்பராய்ஸோயில் கடல் மட்டத்திலிருந்து 169 மீட்டர் உயரத்தில் சுனாமி பேரலைகள் உயர்ந்ததாக ஜியாலஜிகல் சர்வே தெரிவிக்கிறது.
பசிபிக்கில் பூகம்பம் மிகவும் பாதிக்கும் பகுதியில்தான் சிலி நாடு அமைந்துள்ளது. 1969 இல் ரிக்டர் ஸ்கேலில் 9.5 பதிவான பூகம்பம்தான் இதற்கு முன்பு சிலியை தாக்கிய கடுமையான பூகம்பம்.1,655 பேர் அன்றைய பேரிடர் துயரில் இறந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிலியில் பூகம்பம்: 147 பேர் மரணம், பசிபிக் கடலில் சுனாமி அலைகள்"
கருத்துரையிடுக