திரிபோலி:மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டுவதைத் தடைச் செய்த சுவிட்சர்லாந்து அரசின் நடவடிக்கைக்கு எதிராக லிபியா அதிபர் முஅம்மர் கத்தாஃபி மஸ்ஜிதை தகர்க்க நினைக்கும் சுவிட்சர்லாந்துக் கெதிராக எல்லாவிதமான அறப்போர் நடைமுறைப்படுத்தப் பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
திரிபோலியில் பென்காஸி சதுக்கத்தில் நடந்த நபிதின பேரணியில் உரை நிகழ்த்தும் பொழுது இதனை குறிப்பிட்டார். இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் நாட்டுடன் உறவை பேணும் நபர் மத விரோதியாவார் என்றும் அவர் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் எதிராளியாவார் என்றும் கடாஃபி சுட்டிக் காட்டினார்.
சுவிட்சர்லாந்துடனான உறவை முஸ்லிம்கள் முறிக்கவேண்டும். இவர்களுக்கும், சியோனிசத்திற்கும், அந்நிய ஏகாதிபத்தியத்திற் கெதிராகவும் போராட உலகம் தயாராக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த நவம்பர் மாதம் தான் சுவிட்சர்லாந்து சட்டம் இயற்றி மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்தது. இத்தடையை வாடிகன் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்த்திருந்தன.
கடந்த 2008 முதல் லிபியாவும், சுவிட்சர்லாந்திற்கு மிடையிலான உறவு முறிந்தது. கடாஃபியின் மகன் ஹனிபாளையும், அவருடைய மனைவியையும் கைதுச் செய்ததைத் தொடர்ந்துதான் பிரச்சனை உருவெடுத்தது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியை லிபியா கைது செய்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மினாரா கட்டத் தடை: சுவிட்சர்லாந்திற்கெதிராக கடாஃபி அறப்போர் பிரகடனம்"
கருத்துரையிடுக