அங்காரா:ராணுவ புரட்சி மூலம் துருக்கி அரசை கவிழ்க்க திட்டமிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 18 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். துருக்கி நாட்டின் 13 நகரங்களில் போலீஸ் நடத்திய வேட்டையில்தான் இவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்ட 31 பேர் மீது நீதிமன்றம் குற்றஞ் சுமத்தியுள்ளது. மூன்றுபேரை விடுதலைச் செய்தது. நேற்றுக் கைது செய்யப்பட்டவர்களின் ஏழு அட்மிரல்களும், நான்கு ஜெனரல்களும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரையும், விசாரணைச் செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று மேல் மட்ட கூட்டத்திற்கு பின்னர் தெரிவித்தார் துருக்கி பிரதமர் தய்யிப் உருதுகான்.
ஜனநாயக ஆட்சியில் ராணுவம் தலையிடுவதை அனுமதிக்க முடியாது எனவும், அரசுக்கெதிரான செயல்பாட்டை கடுமையான முறையில் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்தார். தற்போதைய சூழல் குறித்து ராணுவ தலைமைத் தளபதியுடனும், அதிபருடனும் அவர் ஆலோசனை நடத்தினார். 1960 முதல் நான்கு முறை ராணுவ புரட்சி ஏற்பட்ட நாடுதான் துருக்கி.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அரசை கவிழ்க்க திட்டம்: துருக்கியில் ராணுவத்தினர் கைது"
கருத்துரையிடுக