27 பிப்., 2010

பிரபல இந்திய கலைஞர் எம்.எஃப்.ஹுஸைனுக்கு குடியுரிமை வழங்கியது கத்தார். இந்தியாவுக்கு பிறந்தது காலம் தாழ்ந்த ஞானம்!

எம்.எஃப்.ஹுஸைன் சர்வதேச அளவில் புகழப்பட்ட ஒரு இந்தியர் என்றும் அவருக்கு அவருடைய சொந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமை உண்டு என்றும் காலம் தாழ்த்தியே அறிவித்துள்ளார் மத்திய உள்துறை செயலாளர்.

எம்.எஃப்.ஹுஸைன் திரும்பிவந்தால் அவருடைய பாதுகாப்பை பலப்படுத்தவும் அரசு தயார் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பாராட்டிற்குரியதுதான்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சாபக்கேடான சங்க்பரிவார் சக்திகளின் மிரட்டலுக்கும், தொந்தரவுக்கும் பயந்து துபாயிலும், லண்டனிலும் வாழ்ந்து வருகிறார் 95 வயதான எம்.எஃப்.ஹுஸைன். அவருடைய ஓவியங்களை அழித்தொழிப்பது, அவை காட்சிக்கு வைக்கப்படும் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சங்க்பரிவாரின் ஒரு பொழுதுபோக்காகும். இந்தியாவின் பல பகுதிகளிலிலுள்ள முன்சிஃப் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் எம்.எஃப்,ஹுஸைன் எதிராக பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தை ஒரு இந்திய குடிமகனின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக அல்ல அதனை இல்லாமலாக்கத் தான் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்கான உதாரணம் தான் இது. ஆனால் அவ்வேளைகளில் இந்திய அரசு மெளனமே சாதித்தது. சங்க்பரிவாரின் மிரட்டலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டுச் சென்ற ஒரு பிரபல கலைஞனை மீண்டும் அழைப்பதற்கும் நிம்மதியாக வசிப்பதற்குரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் தருவதற்கும் அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் இஸ்லாத்தை கேவலமாக விமர்சிக்கும் கருப்பை சுதந்திரம் கேட்கும் வெட்கங்கெட்ட தஸ்லீமா நஸ்ரினுக்கு விசா தரவும், பாதுகாப்புத்தரவும் CCS என அழைக்கப்படும் cabinet committee on security என்ற உயர்மட்ட அமைச்சர்கள் குழு கூடி முடிவெடுக்கிறது. பங்களாதேசைச்சார்ந்த தஸ்லீமா மீது காட்டிய பரிவை எம்.எஃப் ஹுஸைன் மீது ஏன் மத்திய அரசு காட்ட தயாராகவில்லை என்பது கேள்விக்குறியான ஒன்று.

தற்பொழுது எம்.எஃப்.ஹுஸைன் கேட்டுக்கொண்டதற்கிணங்க கத்தர் நாடு அவருக்கு குடியுரிமைத்தர முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. இனியாவது இந்த தொன்னூற்றூ ஐந்து வயது கலைஞன் நிம்மதியாக வாழட்டும் என்று கருதியிருப்பார்கள் போலும். அப்பொழுதுதான் நமது அரசுக்கு தேசத்தின் மீதான அபிமானம் பொத்துக்கொண்டு கிளம்பியது. உடனே எம்.எஃப்.ஹுஸைனுக்கு பாதுகாப்புத்தர தயார் என அறிக்கை விட்டுள்ளது. காலம் தாழ்ந்தாவது ஞானம் வந்ததே! பரவாயில்லை! வேறு என்ன கூறுவதற்கு!

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரபல இந்திய கலைஞர் எம்.எஃப்.ஹுஸைனுக்கு குடியுரிமை வழங்கியது கத்தார். இந்தியாவுக்கு பிறந்தது காலம் தாழ்ந்த ஞானம்!"

கருத்துரையிடுக