காபூல்/புதுடெல்லி:ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நேற்று அதிகாலையில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஒன்பது இந்தியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், இதர தொழிலாளர்களுக்கும் வாடகைக்கு எடுத்த பார்க் ஹவுஸ் கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட மையங்களுக்கு நேராகத்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு ராணுவ மேஜர்களும், தூதரக பணியாளர்களும் கொல்லப்பட்டவர்களில் உட்படுவர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேஜர் டாக்டர்.லாயிஷ்ராம் ஜோதிர்சிங், மேஜர் தீபக் யாதவ், என்ஜினீயர் போலோராம், தபேலா கலைஞர் நவாப்கான், காந்தஹார் தூதரக அதிகாரி நிதீஷ் சிப்பர், இந்திய-திபத்திய எல்லைப்படையின் கான்ஸ்டபிள் ரோஷன் லால், ஆகியோர் மரணித்த இந்தியர்கள்.
இத்தாலி தூதரக அதிகாரிகள், பிரஞ்சுநாட்டை சார்ந்த சுற்றுலா பயணி, ஆப்கான் போலீஸார் ஆகியோர் மரணித்த இதர நபர்களாவர். ஐந்து ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஐந்துபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஷாஃபி லேண்ட்மார்க் ஹோட்டல் அமைந்திருக்கும் ஒன்பது மாடி கட்டிடத்தில்தான் காலை 6.30 மணிக்கு இந்த தாக்குதல் நடைபெற்றது. வெடிப்பொருட்களுடன் வந்த போராளி தானாகவே வெடிக்கச் செய்து வெடித்து சிதறினார்.தொடர்ந்து நகரத்தின் பல பகுதிகளில் சிறிய குண்டு வெடிப்புகளும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது.
தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டுபேரை சுட்டுக் கொன்றதாக போலீஸ் அறிவித்துள்ளது. தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் காபூல் தாக்குதலை கண்டித்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காபூலில் தாக்குதல்: 9 இந்தியர்கள் உட்பட 18 பேர் மரணம்"
கருத்துரையிடுக