26 பிப்., 2010

மப்ஹூஹ் கொலை: இஸ்ரேலுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை

கான்பெர்ரா:ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹைக் கொல்ல ஆஸ்திரேலிய குடிமகன்களின் பெயரிலான பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் இஸ்ரேலுடனான தூதரக உறவு முறியும் என ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் கொலையில் மூன்று ஆஸ்திரேலிய குடிமகன்களின் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்க இஸ்ரேல் தூதரை தனது அலுவலகத்தில் அழைத்து ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித் கோரிக்கை விடுத்தார்.

ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது தெளிவானால் அது நட்பு நாட்டின் நடவடிக்கையாக கருதமுடியாது என தான் இஸ்ரேல் தூதரோடு கூறியுள்ளதாக அமைச்சர் ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் ஆஸ்திரேலியா மெளனம் சாதிக்காது என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்டும் கூறியுள்ளார்.

ஏதேனும் ஒரு நாட்டு பாஸ்போர்ட்டை தவறாக பயன்படுத்தி எவரையேனும் கொல்ல உபயோகிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா பாஸ்போர்டுடைய 3 பேர் மப்ஹூஹ் கொலையில் பங்கெடுத்துள்ளனர் என்று துபாய் போலீஸ் அறிவித்திருந்தது.

இச்சம்பவத்தில் உண்மையான நிலையை அறிய இஸ்ரேலிய அதிகாரிகள் உதவவேண்டுமென கூறிய ஸ்மித் இஸ்ரேலின் பதில் எப்பொழுது வெளியிடப்படும் என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார். ஆதம் மார்க்ஸ் கொல்மான், ஜோஷுவா டேனியல் ப்ரூஸ், நிக்கோல் மக்காபி ஆகியோரின் பாஸ்போர்ட்டைதான் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாத் மப்ஹூஹ் கொலையில் பயன்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் மொத்தம் 26 பேர் இடம்பெற்றுள்ளனர். பாஸ்போர்ட்டை மொஸாத் பயன்படுத்தியது குறித்து தனது மகனுக்கு தெரியாது என ஜோஷுவா டேனியல் ப்ரூஸின் தாயார் ஸாரா ப்ரூஸ் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மப்ஹூஹ் கொலை: இஸ்ரேலுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை"

கருத்துரையிடுக