ஸ்ரீநகர்:போலீசின் கண்ணீர் குண்டுவீச்சில் 16 வயது இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஹுரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பினால் மக்கள் வாழ்க்கை பாதித்தது.
கடைகளும், வியாபார நிறுவனங்களும் பூட்டிக்கிடந்தன. போக்குவரத்து முழுமையாக பாதித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசிற்கும் இடையே நடந்த மோதலில் கண்ணீர் குண்டு வெடித்து ரய்னாவாரியைச்சார்ந்த ஏழாம் வகுப்பு மாணவரான வானிக் ஃபாரூக்கிற்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
ஃபாரூக் பின்னர் மருத்துவமனையில் வைத்து மரணித்தார். ஃபாரூக்கின் மரணத்தைக் கண்டித்து தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியவர்களுக்கு போலீசிற்கும் இடையே நடந்த மோதலில் ஒன்பது போலீசார், ஆறு சி.ஆர்.பி.எஃப் படையினர் உட்பட 35 பேருக்கு காயம் ஏற்பட்டது. பாராமுல்லா, அனந்த்நாக், ஷோபியான், பூல்வாமா, பந்திப்புரா ஆகிய மாவட்டங்களில் பல இடங்களிலும் போலீஸ் கண்ணீர் குண்டு பிரயோகிக்கவும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடவும் செய்தது.
ஃபாரூக்கின் கொலை அரச பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணம் எனக்கூறியுள்ள ஜே.கே.எல்.எஃப், ஜமா அத்தே இஸ்லாமி, டெமோக்ரேடிக் ஃப்ரீடம் பார்டி உட்பட பல்வேறு அமைப்புகள் இச்சம்பவத்தைக குறித்து விசாரணை நடத்தி இக்கொடும் செயலுக்கு காரணமானவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.
கஷ்மீரிகளை இனப்படுகொலைச் செய்வதற்கான முயற்சியின் ஒருபகுதிதான் ஃபாரூக்கின் கொலை என ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் சேர்மன் ஸய்யத் அலி ஷா கீலானி கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "16 வயது இளைஞர் படுகொலை: காஷ்மீர் முழுவதும் போராட்டம்"
கருத்துரையிடுக