ஸ்ரீநகர்:கஷ்மீரில் நிஷாத் பகுதியில் 16 வயது இளைஞரை அநியாயமாக சுட்டுக்கொன்றது மூத்த அதிகாரியின் நிர்பந்தத்தால் என கைதான பி.எஸ்.எஃப் படைவீரர் லக்வீந்தர் சிங் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பி.எஸ்.எஃப் கமாண்டர் ஆர்.கே.பிர்தி உள்ளிட்டவர்களை விசாரணைச் செய்வோம் என ஜம்மு கஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது.
இச்சம்பவத்தில் முதல்நோக்கில்(Prima facie) லக்வீந்தர் சிங் குற்றவாளி என கண்டறியப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். 68-வது பட்டாலியன் பிரிவு படைவீரரான லக்வீந்தர் சிங்கை பி.எஸ்.எஃப் இடைநீக்கம் செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "16 வயது இளைஞரை சுட்டுக்கொன்றது மூத்த அதிகாரியின் நிர்பந்தத்தால்: கைதான பி.எஸ்.எஃப் படை வீரர் வாக்குமூலம்"
கருத்துரையிடுக