13 பிப்., 2010

ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கின் முகத்தில் கறுப்பு சாயம் வீச்சு, மங்களூரில் வன்முறை

பெங்களூரில் வைத்து ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கின் முகத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கறுப்பு சாயம் பூசியதைத் தொடர்ந்து மங்களூரில் வன்முறையில் ஈடுபட்டனர் ஸ்ரீராமா சேனா குண்டர்கள்.பண்டுவால் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த குத்ரோளி நடுவள்ளி என்ற இடத்திலிலுள்ள மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றும் உஸ்மான் ஃபைஸி(வயது 32), அவரது சகோதரர் முஹம்மது அஷ்ரஃப் ஃபைஸி(வயது 29) ஆகியோரை குத்திகாயப்படுத்தினர்.
காயமடைந்த இருவரும் மங்களூர் ஹைலேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மஞ்சேஷ்வரம்,தலப்பாடி ஆகிய இடங்களில் போலீஸ் கடும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சில இடங்களில் தீவைப்பும், வாகனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் நேராக கல்வீச்சும் நடைபெற்றது. இதற்கிடையே கருப்புச்சாயம் முத்தலிக்கின் முகத்தில் வீசியதைக் கண்டித்து மங்களூரில் ஸ்ரீராம சேனா அழைப்புவிடுத்த முழு அடைப்பினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களுக்கு எதிராகவும் கடைகளுக்கு எதிராகவும் கல்வீச்சு நடைபெற்றது.

காதலர் தினத்தையொட்டி ஒரு தனியார் சேனல் ஏற்பாடுச் செய்த விவாதத்தில் பிரமோத் முத்தலிக் கலந்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயத்தை பூசினர்.

கடந்த ஆண்டு மங்களூரில் பொதுவிடுதிக்கு காதலர் தினத்துக்காக வந்த ஏராளமான பெண்களை ஸ்ரீராம சேனாவினர் தாக்கினர். இதைத் தொடர்ந்து முத்தலிக்கை போலீஸ் கைதுச்செய்திருந்தது.மேலும் மங்களூரில் 14 சர்ச்சுகள் தாக்கப்பட்டதின் பின்னணியிலும் பிரமோத் முத்தலிக் உள்ளார். இதனால் மங்களூரில் நுழைவதற்கு போலீஸ் பிரமோத் முத்தலிக்கிற்கு தடைவிதித்திருந்தது.

கடந்த ஆண்டு பிரமோத் முத்தலிக் கூறும்பொழுது, "காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களை பிடித்து திருமணம் முடித்துக் கொடுப்போம்" என்றார். இதனால் கோபம் கொண்ட இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயம் பூசியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கின் முகத்தில் கறுப்பு சாயம் வீச்சு, மங்களூரில் வன்முறை"

கருத்துரையிடுக