மும்பை:கடந்த வியாழக்கிழமை இரவு மும்பை குர்ளாவில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி(35) யின் உடல் நேற்று பெரும் மக்கள் திரளின் முன்னிலையில் குர்ளா கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக உருவாக்கப்பட்ட நேசனல் லாயர்ஸ் நெட்வொர்க்கில் தீவிரமாக பணியாற்றி வந்த ஷாஹிதை கொடூரமாக கொலைச் செய்ததை நேசனல் லாயர்ஸ் நெட்வொர்க்கின் தலைவர் எம்.எம்.முன்ஷி, பொதுச்செயலாளர் பஹர்யுபர்க்கி, தேசிய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிக்காக சட்டரீதியாக போராட தயாராகுபவர்களை பயப்படுத்தி பின்வாங்கச் செய்யும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியே ஷாஹிதின் கொலை என அவர்கள் குறிப்பிட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைதுச் செய்யவேண்டுமென்றும், நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென்றும் லாயர்ஸ் நெட்வொர்க் வலியுறுத்தியுள்ளது.
ஜம்மியத்துல் உலமாவின் வழக்கறிஞராக பணியாற்றிய ஷாஹித் ஆஸ்மி பாப்புலர் ஃப்ரண்டின் ஆதரவாளரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் மஹாராஷ்ட்ரா மாநில எம்.எல்.ஏவுமான அபூ ஹாஸிம் ஆஸ்மியின் மருமகனுமாவார்.
ஜாதி மத பேதமின்றி குர்லா நகர் மக்கள் ஷாஹித் ஆஸ்மியைக் கொன்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுச்செய்யவேண்டுமென புகார் மனு அளித்துள்ளனர்.ஷாஹிதின் ஆபீஸ் பாயின் உதவியோடு குற்றவாளிகள் இருவரின் உருவத்தை தயாராக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. குர்ளாவில் டாக்ஸிமேன் காலணியில் ஷாஹிதின் அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை இரவு எட்டுமணிக்கு நான்குபேர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஃபாஹிம் அன்சாரியின் வழக்கறிஞர்தான் ஷாஹித் ஆஸ்மி. நாட்டின் பல பாகங்களில் தீவிரவாத முத்திரைக்குத்தி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகும் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை ஷாஹித் ஆஸ்மி துணிச்சலுடன் ஏற்று நடத்திக் கொண்டிருந்தார்.
குஜராத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமான அப்பாவி முஸ்லிம்களுக்கு சுயமாகவே வழக்கை நடத்திக்கொண்டிருந்த ஆஸ்மி சங்க்பரிவாரத்திற்கு சவாலாக விளங்கினார். ஷாஹிதிற்கு எதிராக முன்பும் கொலை முயற்சி நடந்துள்ளது. மும்பையில் சயணில் வைத்து ஒரு விபத்தில் இவரை கொல்ல முயற்சி நடந்தது. இரண்டு மாதம் போலீஸ் காவல் அளிக்கப்பட்டிருந்தது. ஷாஹித் ஆஸ்மியின் கொலையில் ரவி பூஜாரி என்ற நிழலுலக தாதாவின் குரூப்பையும், உளவுத்துறை மற்றும் சங்க்பரிவார் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.
செய்தி௦௦௦:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஷாஹித் ஆஸ்மி கொலை: சமுதாயம் கொந்தளிப்பு"
கருத்துரையிடுக