13 பிப்., 2010

அணுசக்தி நாடானது ஈரான்

தெஹ்ரான்:ஈரான் அணுசக்தி நாடானதாக ஈரானின் அதிபர் அஹ்மத் நிஜாத் பிரகடனம் செய்தார். ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 31-வது நினைவு தினத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற பேரணியில் உரை நிகழ்த்தும் பொழுது அஹ்மத் நிஜாத் இதனை தெரிவித்தார்.நதான்ஸ் அணுசக்தி நிலையத்தில் யுரேனியம் செறிவூட்டல் துவங்கியதாக அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்காகவே உயர்ந்த தர யுரேனியம் தயாராக்குவதில் தாங்கள் வெற்றிப் பெற்றுள்ளதாக ஈரான் சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்தது.

அல்லாஹ்வின் கிருபையால் 20 சதவீத செறியூட்டப்பட்ட யுரேனியம் நிர்மாணிப்பதற்கும், அதனை விஞ்ஞானிகளின் பரிசோதனைக்கு அளிக்கவும் எங்களால் முடிந்துள்ளது என பேரணியில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களை சாட்சியாக வைத்து நிஜாத் கூறினார். வருங்காலத்தில் உடனடியாகவே அதன் நிர்மாணத்தை துரிதப்படுத்துவோம் என அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.

தங்களுடைய அணுசக்தி திட்டம் நன்மைக்கான காரியங்களுக்கும், மருத்துவத்திற்கும் மட்டுமே. அணுகுண்டு தயாரிப்பதுதான் எங்களது நோக்கமென்றால் நாங்கள் அதனை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியிருப்போம். அதற்கான துணிவு எங்களுக்கு உண்டு என நிஜாத் தெரிவித்தார்.

யுரேனியம் செறிவூட்டுதல் துவங்கப்பட்டதை கடந்த திங்கள் கிழமை சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கு ஈரான் தெரிவித்துள்ளது. புதன்கிழமை சர்வதேச அணுசக்தி பரிசோதகர் நதான்ஸிற்கு வந்தபொழுது செறிவூட்டுதல் நடவடிக்கை முந்தின தினம் துவங்கப்பட்ட விபரம் கிடைத்ததாக I.A.E.A தலைவர் யூகிய அமனோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குறைந்த அளவில் பண்படுத்திய 1.8 டன் யுரேனியத்திலிருந்து சோதனைக்காக 10 கிலோகிராம் மட்டும் ஒரு கலத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். யுரேனிய வாயு செறிவூட்டல் தன்மை ஏற்படும்வரை சுழலச்செய்வதற்கான 164 செண்ட்ரிஃப்யூஜிகள் சேர்ந்த chain தான் கேஸ்கேட் என்ற கலன் 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம்தான் அணுகுண்டு தயாரிக்க தேவை.

செறிவூட்டல் சிக்கலான முதல்கட்டத்தை தாண்டியுள்ள சூழலில் 90 சதவீத செறிவூட்டல் எளிது என்பது வல்லுநர்களின் கருத்து. அதேவேளையில் ஈரானின் புதிய பிரகடனத்தின் அடிப்படையில் ஈரானுக்கெதிராக பொருளாதாரத் தடையை வலுப்படுத்தியுள்ளது.

ஈரானின் புரட்சிப்படை ஜெனரல் ருஸ்தம் காஸ்மி மற்றும் அவருடைய கட்டுப்பாட்டிலிலுள்ள கட்டுமான கம்பெனியின் நான்கு துணை நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க அமெரிக்க ட்ரஸரி டிபார்ட்மெண்ட் தீர்மானித்துள்ளது. ருஸ்தமின் கட்டுப்பாட்டிலிலுள்ள காத்தமுல் அன்பியா கட்டுமான நிறுவனத்திற்கெதிராக தடை ஏற்கனவே துவங்கியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணுசக்தி நாடானது ஈரான்"

கருத்துரையிடுக