வாஷிங்டன்:கடந்த ஆண்டு அமெரிக்க அரசுக்கெதிராக தாக்குதல் நடத்த மக்களை தூண்டிவிடுகிறார் என்ற குற்றம் சாட்டி எஃப்.பி.ஐ குழு ஒன்று டெட்ராயிடில் முஸ்லிம் அறிஞர் லுக்மான் அமீன் அப்துல்லாஹ்வை சுட்டுக்கொன்றது.
தற்ப்பொழுது அவரது உடல் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அறிஞர் அமீன் அப்துல்லாஹ் 20 தடவை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. கைதுச்செய்ய முற்படும்பொழுது எதிர்ப்புத் தெரிவித்ததால் சுட்டதாக எஃப்.பி.ஐ கூறியிருந்தது. ஆனால் எஃப்.பி.ஐ யின் குற்றச்சாட்டை அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர். ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் அடிப்படையிலேயே அவர் கொல்லப்பட்டார் என மற்றொரு இஸ்லாமிய அறிஞரும் அமெரிக்காவில் மஸ்ஜிதுல் இஸ்லாமின் இமாமுமான அப்துல் அலி மூஸா பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் தெளிவுப்படுத்தினார்.
அமீன் அப்துல்லாஹ்வை கொன்றதை நியாயப்படுத்த அரசு 50 பக்க குற்றப்பத்திரிகை தயார்படுத்தியதாகவும் அலி மூஸா கூறியிருந்தார். நவம்பர் மாதமே போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தயாராகிவிட்டாலும் புலனாய்வு நடந்துக்கொண்டிருந்ததால் வெளியிடப்படவில்லை.
ரிப்போர்ட் வெளியிடப்பட்டதைத்தொடர்ந்து அமீன் அப்துல்லாஹ்வின் கொலையைப்பற்றி மீண்டும் விசாரிக்க அமெரிக்க ஜுடிசியரி சேர்மன் ஜாண் கோணேர்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முஸ்லிம் அறிஞரை எஃப்.பி.ஐ 20 தடவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்"
கருத்துரையிடுக