ஐ.நா:இந்தியா உட்பட 55 நாடுகள் கார்பன் உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்களின் வெளியிடும் அளவைக் குறைக்க ஐ.நாவுக்கு உறுதியளித்துள்ளன. இதனை ஐ.நா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நடவடிக்கை கோபன்ஹெகன் மாநாட்டில் விவாதித்ததற்கு வலுவூட்டுவதாக ஐ.நா மதிப்பீடுச் செய்துள்ளது. உலகத்தில் பசுமைக்குடில் வாயுக்களை 78 சதவீதம் வெளியிடும் 55 நாடுகள்தான் ஐ.நா வில் தங்களுடைய தீர்மானத்தை அறிவித்துள்ளன. இது சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதித்தேதி ஜனவரி மாதமாகும்.
ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பியன் யூனியன் நாடுகள் ஆகியன 2020 ஆண்டில் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியிடும் அளவை 17 சதவீதம் குறைக்க சம்மதித்திருந்தன. இது மிகவும் குறைவான அளவு என குற்றச்சாட்டு எழுந்திருந்தது. ஆனால் புதிய நடவடிக்கையும் பூமியின் வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸில் சுருக்க போதுமானதல்ல என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கான புதிய நடவடிக்கைகள் உருவாகவேண்டுமென ஐ.நா பருவநிலை மேலதிகாரி யுவொ டி போயர் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பசுமைக்குடில்(கார்பன்) வாயுக்களின் அளவைக்குறைக்க 55 நாடுகள் உறுதியளித்துள்ளன"
கருத்துரையிடுக