கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் திறந்து வைத்தார். இதனால், மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பத்மலோசனன். கொல்லம் மாநகர மேயராகவும் இருக்கிறார். கொல்லத்தில் நாளை மறுதினம் ஆர்.எஸ்.எஸ். மாநில கூட்டம் நடைபெறுகிறது. ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச உள்ளார். அவருடைய வருகையை முன்னிட்டு, கொல்லகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக் குழு அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விழாவில், இந்த அலுவலகத்தை பத்மலோசனன் திறந்து வைத்தார். அப்போது, ஆர்.எஸ்.எஸ். முன்னோடி தலைவர்களான ஹெட்கேவர். கொல்வால்கர் ஆகியோரின் புகைப்படங்களின் முன்பாக குத்து விளக்கு ஏற்றினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் இப்படி செய்ததது கேரள மார்க்சிஸ்ட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சி கட்டுப்பாட்டை மீறி விட்டதாக பத்மலோச்சானந்தன் மீது கட்சி தலைமையிடம் மாவட்ட நிர்வாகிகள் புகார் செய்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை மார்க்சிஸ மூத்த தலைவர் ஒருவர் திறந்து வைத்த சம்பவம் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரம், "மோகன் பகவத் வருகையை முன்னிட்டு இந்த மையத்தில் பல்வேறு நிலத்திட்டங்கள் செய்யப்பட உள்ளன. மேயர் என்ற முறையில் அதை திறந்து வைக்கும்படி எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நானும் அதன்படி அலுவலகத்தை திறந்து வைத்தேன். இதை பெரிதுப்படுத்த வேண்டிய தில்லை" என்று பத்மலோசனன் கூறினார்.
source:dinakaran
1 கருத்துகள்: on "கேரளா: ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை மார்க்சிஸ்ட் தலைவர் திறந்தார்"
to retain its secular face markxist should wipe this odd one(padmalochanan) otherwise people will wipe markxist
கருத்துரையிடுக