காபூல்:ஆக்கிரமிப்பு அந்நிய அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் உருஸ்கான் மாகாணத்தில் வாகனங்களை நோக்கி நடத்திய தாக்குதலில் 33 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
நான்கு பெண்களும், குழந்தையும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என ஆப்கான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸமீரி பஸாரி கூறுகிறார். தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு தவறு நேர்ந்ததாக அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் கூறுகிறது. 42 பேர் வாகனங்களில் இருந்தனர்.
இந்த அக்கிரமத் தாக்குதலை வன்மையாக கண்டித்த ஆப்கான் அமைச்சரவை இத்தாக்குதலை அங்கீகரிக்க முடியாது எனக்கூறியுள்ளது. அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவமும், ஆப்கான் அரசு விசாரணையை மேற்க்கொண்டுள்ளது.
இதற்கிடையே காபிஸ மாகாணத்தில் தோலாத் கெல்லில் பிரான்சு ஆக்கிரமிப்பு அந்நியப்படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தை உட்பட இரண்டு அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆறுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உள்ளூர் வியாபாரிகளுக் கெதிராகத்தான் ஆக்கிரமிப்பு படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தாக்குதலை நேரில் கண்டவர்கள் பிரஸ் டிவியிடம் கூறியுள்ளனர்.
குடிமக்களை கொலைச்செய்யும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரின் செயலை ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயி கடந்த சனிக்கிழமை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலில் குடும்பத்தில் அனைவரையும் இழந்து தவிக்கும் 8 வயது சிறுமியின் போட்டோவை உயர்த்திப் பிடித்தவாறு கர்ஸாயி ஆக்கிரமிப்பு படையினரின் நடவடிக்கையில் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு விமானப்படையின் அக்கிரமத்தாக்குதலில் 33 சிவிலியன்கள் பலி"
கருத்துரையிடுக