மும்பை:புனேயில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா இயக்கங்களின் பங்கை புறக்கணிக்க இயலாது எனவும், இதனைக் குறித்து மஹாராஷ்ட்ரா அரசு விசாரணைச் செய்யவேண்டும் எனவும் மூத்த அரசு உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் பத்திரிகையாளர்களோடு தெரிவித்தார்.
பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற புனே குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு பங்குண்டா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் பொழுதுதான் அவர் இதனை தெரிவித்தார்.
இக்குண்டுவெடிப்பில் 15 பேர் மரணமடைந்திருந்தனர். புனே ஹிந்துத்துவா இயக்கங்களின் மையமாகும் எனவே புலன் விசாரணையில் இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவரை எந்த இயக்கத்திற்கும் பங்குள்ளதாக தெளிவாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஹிந்துத்துவா இயக்கமான அபினவ் பாரத்திற்கு புனே குண்டுவெடிப்பில் பங்குள்ளதாக ஏற்கனவே சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. மாலேகான் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெளிவான ஒன்று.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு- ஹிந்துத்துவா இயக்கங்களின் பங்கை புறக்கணிக்க இயலாது: மத்திய அரசு"
கருத்துரையிடுக