ஜித்தா:வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்காக உழைக்கும் சமூக நல அமைப்பான இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் ஜித்தா மண்டலம் சார்பாக "ஆரோக்கியமான வாழ்க்கை! மகிழ்ச்சிகரமான வாழ்க்கை!" என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 6 வாரங்கள் நீடிக்கும் கால்பந்துபோட்டி துவங்கியது.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வாழும் இந்தியர்கள் சார்பான 10 அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன.இப்போட்டிகள் 3 மைதானங்களில் நடைபெறும். இறுதிப்போட்டி மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும்.
பெரும் மக்கள் கூடிய துவக்க நிகழ்ச்சியில் முதல் போட்டியை ஆரம்பித்துவைத்தார் இந்திய தூதரக ஜெனரல்.ஒருங்கிணைப்பாளர் அப்துல்கனி உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இது வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு எவ்வளவு தேவையானது என்பதையும், தனிமனித, பொதுவாழ்வுக்கு மிகப்பெரிய சொத்து உடல்நலம் என்பதையும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
அஹ்மத் சுஹைல் வரவேற்றார். இக்பால் செம்பன் நன்றியுரை நவின்றார். இந்த மாதம் முழுவதும் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜித்தா மாகாணம் முழுவதும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக நடைபெறுகிறது.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "ஆரோக்கியமான வாழ்க்கை பிரச்சாரம்: ஃபெடர்னிடி ஃபாரம் ஜித்தா சார்பாக நடத்தப்படும் கால்பந்துப் போட்டி துவங்கியது"
கருத்துரையிடுக