யெமன்:வடக்கு யெமனில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அரசுப் படைகளுக்கும், ஷியா பிரிவு ஹூத்திப் போராளிகளுக்கும் இடையே நடந்துவரும் போரில் 187 குழந்தைகள் கொல்லப்பட்டதாக சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் மற்றும் யெமன் நாட்டின் குழந்தைகள் உரிமை அமைப்பு சியாஜ் ஆகியன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
கடந்த திங்கள் கிழமை இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 30 சதவீத குழந்தைகள் போரினால் உணவு விநியோகம் தடைப்பட்டதால் பசியால் இறந்ததாக அறிக்கை கூறுகின்றது. மேலும் இவ்வறிக்கையில் 70 ஆயிரம் குழந்தைகள் புலன் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
போரினால் சதா நகர் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள இரு மருத்துவமனைகளும், ஒரு க்ளீனிக்கும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு மனிதநேய ஊழியர்கள் பாதுகாப்பாக இடம்புலர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
செய்தி:presstv
0 கருத்துகள்: on "யெமன் போர்:187 குழந்தைகள் பலி, அறிக்கை"
கருத்துரையிடுக