23 பிப்., 2010

ஹமாஸ் தலைவர் கொலை: ஆதாரத்தை கொடுக்கவேண்டுமாம் கேட்கிறது இஸ்ரேல்

துபாய்:கடந்த ஜனவரி 20ஆம் தேதி துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து ஹமாஸின் ராணுவ பிரிவுத் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டிருந்தார்.

இக்கொலைப்பற்றி தீவிரவிசாரணையை மேற்க்கொண்ட துபாய் போலீஸ் குற்றவாளிகளின் விபரத்தை வெளியிட்டது. மேலும் அவர்கள் ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்ததும் கண்டறியப்பட்டது. மேலும் இவர்கள் மொஸாதின் ஏஜண்டுகள்தான் என்பதற்கான ஆதாரங்களும் பத்திரிகைகளால் வெளியிடப்பட்டது. துபாய் போலீஸும் இதனை உறுதிச்செய்தது.

கொலையாளிகளில் 7 பேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டு பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களில் பயணம் செய்து கொலைக் குற்றத்தை நிறைவேற்றிய மொஸாத் மீது கடும் கோபமடைந்த ஐரோப்பிய நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இஸ்ரேலிய தூதுரக அதிகாரி இதற்கு விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரியது.

ஐரோப்பிய யூனியனில் உள்பட்ட நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "துபாயில் மஹ்மூத் அல் மப்ஹூஹின் கொலையில் எழும் பிரச்சனைகள் எங்களை ஆழமாக தொந்தரவுக்கு ஆளாக்குகிறது" என கூறியுள்ளனர். மேலும் எங்கள் நாட்டு அடையாள அட்டைகளை திருடி பயன்படுத்தியதையும், பாஸ்போர்ட்டுகள் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி மோசடிச் செய்துள்ளதையும் வன்மையாக கண்டிக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச அளவில் தங்களின் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பும் கண்டனமும் எழுவதைக் கண்ட இஸ்ரேல் தற்ப்பொழுது சற்று வாய் திறந்துள்ளது. ஐரோப்பியன் யூனியன் நாடுகளை இவ்விவகாரத்தில் தாஜாச் செய்வதற்காக பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் லிபர்மான் கூறுகையில், "இக்கொலைக்கு நாங்கள் தான் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. இஸ்ரேல் மீது பல தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை ஒதுக்கிவைத்து விட்டு ஆதாரங்களை தாருங்கள் நாங்கள் பதிலளிக்கிறோம். எதற்கெடுத்தாலும் இஸ்ரேலை குற்றஞ்சுமத்துவது அரபுகளின் பொதுவான பண்பு. மத்திய கிழக்கு நாடுகளிலிலுள்ள ஜனநாயகம் இல்லாத நாடுகளிலும், அமைப்புகளிலும் உள் குழப்பங்கள் நிலவி வருகின்றன." என்று மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.

இதற்கிடையில் துபாய் போலீஸ் தலைவர் அல்பயான் அரபு இதழுக்கு அளித்த பேட்டியில்,இக்கொலையில் மொஸாதின் தொடர்புக்கான ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தி:presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் கொலை: ஆதாரத்தை கொடுக்கவேண்டுமாம் கேட்கிறது இஸ்ரேல்"

Unknown சொன்னது…

it is a known fact that mossad has been heading various assasinations of world leaders.now the truth comes in media,a rare event. i wish all human hearted persons to spread this msg

கருத்துரையிடுக