துபாய்:மத்திய கிழக்கு நாடுகளில் மிகுந்த வாழ்க்கை வசதிகள் யு.ஏ.இ யில்தான் அதிகம் என எக்ணாமிக்ஸ்ட் இண்டலிஜன்ஸ் யூனிட் வெளியிட்ட சர்வே அறிக்கை தெரிவிக்கிறது.
160 நாடுகளில் வாழ்க்கை வசதிகளை குறித்து நடத்திய ஆய்வில் யு.ஏ.இ க்கு 15-வது இடமாகும். யு.ஏ.இ யின் எல்லாத் துறைகளிலும் அந்நாடு சந்தித்த முன்னேற்றம் தான் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்க்கை வசதிகளில் முன்னிலை அடைய உதவியுள்ளது.
பொருளாதார நிலை, பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி ஆகிய துறைகள்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பொது ஆட்சி கட்டமைப்பு, ஆட்சி நிர்வாகம், உள்நாட்டு உற்பத்தியின் குறியீட்டெண்ணின் வளர்ச்சி(GDP) ஆகியனவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
குடும்ப, ஆரோக்கிய சேவைகள், வாழ்க்கை சூழல் ஆகியன அளவு கோல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. தற்ப்போதைய முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்று கூறிய எமிரேட்ஸ் காம்பெட்டெட்டிவ் கவுன்சில் செகரட்டரி ஜெனரல் அப்துல்லா நாஸர் லூத்தா தேசம் அதிக முன்னேற்றங்களை நோக்கி செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மிகுந்த வாழ்க்கை வசதிகள் உள்ள நாடுகளில் யு.ஏ.இ முன்னணியில்"
கருத்துரையிடுக