கஸ்ஸா:துபாயில் கொல்லப்பட்ட மஹ்மூத் அல் மப்ஹூஹ் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக் குறைவாக இருந்ததால் தான் அவரது பாதுகாப்பு விஷயத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது என ஹமாஸ் கூறியுள்ளது.
ஆன்லைனில் விமான டிக்கெட் பதிவுச் செய்தது, மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியது. அவ்வாறு உரையாடும் பொழுது தான் எங்கு எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்பதை தெரிவித்தது, ஆகியன எதிரிகளுக்கு உதவியதாக கஸ்ஸாவில் ஹமாஸின் தலைவரான ஸலாஹ் பர்தாவில் தெரிவித்தார்.
இந்தக் கவனக் குறைவு நிச்சயமாக அவரது பாதுகாப்பு விஷயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மப்ஹூஹின் கொலையில் இஸ்ரேலுக்கு நேரடியாகவே தொடர்புள்ளது. அதன் பலனை இஸ்ரேல் இன்று அல்லது நாளை அனுபவிக்கும்,எனக் கூறுகிறார்.
அதேவேளையில் மப்ஹுஹ் கொலைத் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன்,அயர்லாந்து,ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகள் கொலையாளிகள் தங்கள் நாட்டு பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதுக் குறித்து விளக்கமளிக்க இஸ்ரேலின் தூதர்களை அழைத்துள்ளன.
கொலையாளிகள் பயன்படுத்திய ஜெர்மனி பாஸ்போர்ட் ஒரிஜினல் தான் என்று ஜெர்மனியின் டெர்ஸ்பீகல் மாத இதழ் தெரிவிக்கிறது. கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 11 பேரும் ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தியுள்ளனர். கொலையாளிகள் பயன்படுத்திய பிரிட்டன் பாஸ்போர்ட் போலி என்று முதலில் கூறப்பட்டது, பின்னர் பாஸ்போர்ட் எண்ணும், பெயரும் போலி அல்ல என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இஸ்ரேல் வழியாக பயணித்த பிரிட்டீஷாரின் பாஸ்போர்ட்டில் விபரங்கள் பென்குரிய விமானநிலையத்தில் வைத்து ரகசியமாக காப்பி எடுத்து இஸ்ரேல் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர் என பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுடைய நாட்டின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதைக் குறித்து ஜெர்மனி அதிகாரிகளும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே ஆஸ்திரியாவும், அமெரிக்காவும் மப்ஹூஹ் கொலை விசாரணையில் கூட்டுச் சேர்ந்துள்ளன. தங்களது நாடுகளின் டெலிபோன்களும், கிரடிட் கார்டுகளும் குற்றவாளிகள் பயன்படுத்தியதுத் தொடர்பாகத் தான் இந்த விசாரணை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மஹ்மூத் அல் மப்ஹுஹ் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வீழ்ச்சி: ஹமாஸ்"
கருத்துரையிடுக