காபூல்:மர்ஜாவில் நடைபெற்றுவரும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ராணுவத்தினரின் தாக்குதல் மூலம் தாலிபான்களை பேச்சுவார்த்தைக்கு இணங்கச் செய்யலாம் என்ற ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயியின் திட்டம் அஸ்தமனமானது.
நேற்று முன்தினம் கர்ஸாயி முன்வைத்த பேச்சுவார்த்தை திட்டத்தை தாலிபான்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். கர்ஸாயி ஆக்கிரமிப்பு படையினரின் வெறும் கைப்பாவை. ஒரு சமூகத்தையோ, ஒரு அரசாங்கத்தையோ நிர்வகிப்பதற்கான தகுதி அவருக்கில்லை. இதனை தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் காரி முஹம்மது யூசுஃப் கர்ஸாயிக்கு அளித்த பதில் செய்தியில் குறிப்பிட்டார்.
ஊழலில் மூழ்கியுள்ளார் கர்ஸாயி. பண வெறிப்பிடித்த பிரபுக்கள் தான் கர்ஸாயியை சுற்றியுள்ளனர்.நேட்டோ-ஆப்கான் ஒருங்கிணைந்த படையினரின் ஆபரேசன் முஷ்தரக்கிற்கு எதிராக கடுமையான எதிர்ப்புப்போர் மர்ஜாவில் தாலிபான்கள் தொடர்வதாகவும் யூசுஃப் குறிப்பிட்டார். இரவு பகல் பாராமல் தலிபான்கள் கடுமையான எதிர்ப்புப்போரை நடத்தி வருகின்றனர். மர்ஜாவின் எல்லா மூலைமுடுக்குகளிலும் நேட்டோ படையினர் கடும் பதிலடியை சந்தித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் போரின் உண்மையான நிலையை உணர்ந்ததால் தான் ஹாலந்து நாட்டுமக்கள் ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதைக் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து ஹாலந்து அரசு நேற்று முன்தினம் வீழ்ந்ததை குறித்து குறிப்பிட்டார் காரி யூசுஃப்.
விமானப்படையின் ஆதரவோடு ஹெல்மந்த் மாகாணத்தில் மர்ஜாவிற்கு எதிராக நடக்கும் தாக்குதல் ஒரு வாரம் தாண்டியும் 15 ஆயிரம் ராணுவவீரர்களால் இயலவில்லை என்பது எதனால் என்று கேள்வியெழுப்புகிறார் யூசுஃப். மர்ஜாவில் நடைபெறும் போராட்டத்தினால் இதுவரை 14 தலிபான்களை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மர்ஜாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையின் மூலம் தாலிபான்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராவார்கள் என்பது கர்ஸாயியின் எதிர்பார்ப்பு. தாலிபானின் துணைத்தலைவர் முல்லா அப்துல்கனி பரதான் சமீபத்தில் கராச்சியில் கைதுச் செய்யப்பட்டதும் தாலிபான்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று கணக்குப் போட்டார் கர்ஸாயி. அதேவேளையில் ஆபரேசன் முஷ்தரிக்கின் பெயரால் அப்பாவிகளை கொன்றுக் குவிப்பதை நேட்டோ படையினர் நிறுத்தவேண்டும் என்றும் கர்ஸாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ தலைமையிலான வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையின் கொடூரத் தாக்குதலால் குடும்பத்தில் 12 பேரையும் இழந்து தவிக்கும் 8 வயது சிறுமியின் போட்டோவைக் காண்பித்து பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்தார். ஆபரேசன் முஷ்தரிக்கில் இதுவரை 24 அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வ கணக்கு. கொல்லப்பட்ட ஆப்கான் ராணுவத்தினரின் எண்ணிக்கை கிடைக்கவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கர்ஸாயின் புதிய சமாதான திட்டத்தையும் மறுத்தது தாலிபான்"
கருத்துரையிடுக