21 பிப்., 2010

சமூக வலிமையடைய பெண்களின் பங்கு மிக அவசியம் - பெண்கள் கருத்தரங்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் (21.02.2010) நிகழ்ச்சியின் துவக்கமாக ஹஜ்ரத் பேகம் மஹல் என்று பெயரிடப்பட்ட வண்டியூர் ரிங் ரோடு மாநாட்டு திடலில் 'சமூகம் வலிமையடைதலில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் காலை 11.00 மணிக்கு பெண்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம் அப்துல் ரஹ்மான், தேசிய பொது செயலாளர் கே.எம் ஷரீஃப், மாநில தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்களும் அறிமுக உரை நிகழ்த்தினர்.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் மாநில செயலாளர் சகோதரி. எஸ்.ஃபாத்திமா கனி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையுரை நிகழ்த்திய நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் மாநில தலைவர் சகோதரி. எஸ். ஃபாத்திமா ஆலிமா அவர்கள், "சமூகத்தின் எண்ணிக்கையில் பாதியளவு பெண்கள் இருப்பதால் சமூக வலிமையடைதலில் பெண்களின் பங்கும் மிக மிக அவசியம். சமூகம் மிகவும் பின் தங்கியிருப்பதை சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டும்பொழுது, அதை மாற்ற சமூக எழுச்சியில் பெண்களின் பங்கு என்பது தவிர்க்க முடியாதது. இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தனது காலத்தில் எல்லாதுறைகளிலும் பெண்களின் பங்களிப்பை சாத்தியமான அளவிற்கு பயன்படுத்தி சமூகத்தை வலிமையடையச் செய்தார்கள். எனவே இன்றும் நமது பங்களிப்பை நாம் வழங்க வேண்டும். சமூகத்தை சக்தி படுத்த நம்மால் இயன்ற தியாகங்களை செய்ய முன் வரவேண்டும்" என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் தேசிய தலைவர் சகோதரி. ஜைனபா, தேசிய செயற்குழு உறுப்பினர் சகோதரி. ஜரீனா மற்றும் மாநில துணைத் தலைவர் சகோதரி. ஆயிஷா சித்தீக்கா, மேலப்பாளையம் முஸ்லிம்கள் குறித்தும் அவர்களின் வாழ்வுநிலை குறித்தும் விரிவாக ஆராய்ந்து நூல் எழுதியுள்ள சகோதரி. சாந்தி ஆகியோர் கருத்தரங்கின் மையக் கருத்தை ஒட்டி சிறப்புரையாற்றினார்கள்.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் மாநில பொருளாளர் சகோதரி. ஏ.சித்தி ஆலியா அவர்கள் நன்றியுரையாற்ற மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரி. நஃபீஸா அவர்கள் கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். இக்கருத்தரங்கில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சமூக வலிமையடைய பெண்களின் பங்கு மிக அவசியம் - பெண்கள் கருத்தரங்கம்"

கருத்துரையிடுக