பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக எழுச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று(பிப்ரவரி 20) அன்று மதுரை குப்தா ஆடிடோரியத்தில் 'சமூக வலிமையடைதலும் சவால்களும்’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை துவக்கி வைத்துப்பேசிய டெஹல்கா புலனாய்வு இதழின் சிறப்பு ஆசிரியரான அஜீத்ஸாஹி உரை நிகழ்த்துகையில், "முஸ்லிம்களுக்கு இந்தியாவின் எந்தப்பகுதியில் உரிய உரிமை வழங்கப்படுவதில்லை. அரசு நிர்வாகம் முஸ்லிம்களை பாரபட்சமாகவே நடத்துகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே பார்க்கின்றனர். ஆனால் நான் ஒன்று முஸ்லிம்களுக்கு கூறுகிறேன், நீங்கள் இதனைக் கண்டு பயந்துவிடக்கூடாது. மாறாக நீதிக்காக தொடர்ந்து போராடவேண்டும். இறைவனின் தூதர் முஹம்மது நபியவர்கள் முஸ்லிம்களுக்கு சிறந்த முன்மாதிரியாவார்.அவர்கள் நீதிக்காக போராடினார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி:twocircles.net
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "முஸ்லிம்கள் நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும்: டெஹல்கா எடிட்டர் அஜித் ஸாஹி"
கருத்துரையிடுக