டெஹ்ரான்:ஆமை, எலி போன்ற பிராணிகள் அடங்கிய கேப்ஸ்யூலை சுமந்த ராக்கெட்டை ஈரான் விண்வெளியில் வெற்றிக்கரமாக செலுத்தியது.
காவோஸ்கர்-3 என்றழைக்கப்படும் ராக்கெட்டைத்தான் ஈரான் வெற்றிக்கரமாக செலுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி காவோஸ்கர்-1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது. காவோஸ்கர்-2 என்ற ராக்கெட்டை நவம்பர் 2008 இல் செலுத்தியது.
ஈரான் விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட உலகின் 11-வது நாடாகும். ஈரானின் பாதுகாப்புத்துறை பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியதற்கு பாராட்டைத் தெரிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், "ஈரானின் விண்வெளி ஆய்வு அமைதிக்கானதாகும். ஏதாவது தேசம் அமைதியற்றத் தன்மைக்கு விண்வெளியை பயன்படுத்தினால் அதனை ஈரான் பொறுத்துக்கொள்ளாது". என்றார்.
செய்தி:presstv
செய்தி:presstv
0 கருத்துகள்: on "பிராணிகளுடனான ஆராய்ச்சி ராக்கெட் விண்வெளியில் செலுத்தியது ஈரான்"
கருத்துரையிடுக