கஸ்ஸா:இஸ்ரேல் ராணுவ வீரன் கிலாத் ஷாலிதிற்கு பதிலாக ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான இஸ்ரேல் நடத்தி வரும் பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாக மூத்த ஹமாஸ் தலைவர் மஹ்மூத் ஸஹர் கூறுகிறார்.
கடந்த ஆண்டு ஜெர்மனி மத்தியஸ்தராக வைத்து நடந்த பேச்சுவார்த்தையில் நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளுக்கு பதிலாக ஹமாஸின் வசமுள்ள ஷாலிதை விடுதலைச் செய்ய ஒத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுதான் காரணம் என ஸஹர் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டுதான் ஹமாஸ் போராளிகள் ஷாலிதை கைதுச் செய்தனர். மூத்த ஹமாஸ் தலைவர்கள் உட்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு நெதன்யாகு கடும் நிபந்தனைகளை விதிப்பதாக ஸஹர் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஹமாஸ் தகவல்"
கருத்துரையிடுக