பாரிஸ்:மனைவியிடம் புர்கா அணிய நிர்ப்பந்தப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரான்சு அரசு வெளிநாட்டைச்சார்ந்த இளைஞர் ஒருவருக்கு குடியுரிமையை மறுத்துள்ளது.
பிரான்சு நாட்டைச் சார்ந்த மனைவியுடன் பிரான்சில் வசிப்பதற்கு குடியுரிமைக்கோரி விண்ணப்பித்த இளைஞர் ஒருவரின் மனுவைத்தான் பிரான்சு அரசு நிராகரித்துள்ளது. மனைவியை இஸ்லாமிய ஆடையை அணிய வற்புறுத்தியதால்தான் குடியேற்ற உரிமையை மறுத்ததாக குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸ்ஸன் கூறுகிறார்.
முகத்தை மறைத்துக் கொண்டு அணியும் புர்காவை பகுதியாக தடைச்செய்ய பாராளுமன்ற கமிட்டி கடந்த வாரம் சிபாரிசுச் செய்திருந்தது. மத அடிப்படைவாத அடையாளங்களை வெளிப்படுத்துபவருக்கு வசிப்பதற்கான அனுமதியும், குடியுரிமையும் வழங்கக்கூடாது எனவும் கூறியிருந்தது.
மனைவியை புர்கா அணிய வற்புறுத்தியதால் மதசார்பற்ற தன்மையையும், ஆண்-பெண் சம உரிமையையும் மறுத்ததாக எரிக் பெஸ்ஸன் குற்றஞ்சாட்டுகிறார். ஐரோப்பாவிலேயே மிக அதிகமான முஸ்லிம்கள் வாழும் பிரான்சு நாட்டில் 1900 பெண்கள் மட்டுமே முகத்தை மறைக்கு புர்கா அணிவதாக பிரான்சு உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
2008 ஆம் ஆண்டு மொராக்கோ நாட்டைச்சார்ந்த் பெண் ஒருவருக்கு பிரான்சு நாட்டு நீதிமன்றம் குடியுரிமை மறுத்ததற்கு காரணமாக கூறப்பட்டது அவர் இஸ்லாமிய கடமைகளை தீவிரமாக பின்பற்றுகிறார் என்று.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மனைவியை புர்கா அணிய வற்புறுத்தியதாக கூறி வெளிநாட்டு இளைஞருக்கு குடியுரிமையை மறுத்த பிரான்சு அரசு"
கருத்துரையிடுக