17 பிப்., 2010

டெல்லி விமானங்களை உளவுப்பார்த்த இரண்டு பிரிட்டன் நாட்டவர் கைது

புதுடெல்லி:டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அருகிலிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு பிரிட்டீஷ் குடிமகன்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்டீஃபன் ஹாம்ப்ஸ்டன், ஸ்டீவ் மார்டின் ஆகியோரை ராட்டிஸன்ஹோட்டல் அதிகாரிகள் அளித்த விபரத்தின் அடிப்படையில் போலீஸ் கைது செய்தது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையின் காரணமாகத்தான் இருவரையும் கைது செய்ததாக டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.தட்வால் கூறுகிறார்.

சர்வதேச விமானநிலையத்திற்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்படும், வந்துச்சேரும் விமானங்களை சக்திவாய்ந்த பைனாகுலர் மூலம் கண்காணித்ததை கண்டதால் ஹோட்டல் அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பைனாகுலர் மட்டுமல்லாமல் சில நவீன தொழில்நுட்ப கருவிகளும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவும், ஐ.பி அதிகாரிகளும் இருவரிடமும் விசாரணை நடத்தினர். ஹாம்ப்ஸ்டன் அனுப்பிய ஒரு மின்னஞ்சலை குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீஸ் கூறுகிறது. இருவரையும் கைது செய்ததை குறித்து பிரிட்டீஷ் ஹைக்கமிஷனருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லி விமானங்களை உளவுப்பார்த்த இரண்டு பிரிட்டன் நாட்டவர் கைது"

கருத்துரையிடுக