லண்டன்:ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹை கொன்ற 11 அங்க குற்றவாளிகளில் 9 பேர் பிரிட்டன் பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர்கள் என்று நேற்று துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பிரிட்டீஷ் அரசு வட்டாரங்கள், அக்குற்றவாளிகள் போலியான ஆவணங்களில் துபாய்க்கு வந்துள்ளதாகவும், அவர்கள் பெரும்பாலும் இஸ்ரேலின் மொஸாத் உளவுத்துறை ஏஜண்டுகள் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் பிரிட்டீஷ் அரசு அதிகாரிகள் கூறுகையில் ஐரிஷ் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படும் குற்றவாளிகளும் போலியான ஆவணங்களில் தான் பயணம் செய்திருக்கலாம் எனவும் அவர்களும் இஸ்ரேலிய மொஸாத் ஏஜண்டுகளாகத் தான் இருப்பர் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஐரிஷ் வெளியுறவு விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஐரிஷ் நாட்டைச் சார்ந்தவர்கள் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறித்து மறுப்புத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "ஐரிஷ் தூதரகம் அபுதாபியுடன் தினம் தோறும் நிரந்தரத் தொடர்பை வைத்துள்ளது. இதுவரை ஐரிஷ் நாட்டவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை" என்றார்.
துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் முன்பு தெரிவிக்கையில், இக்குற்றத்தில் மொஸாத் ஈடுபட்டிருந்தால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றார். நேற்று தமீமி தெரிவிக்கையில், "மொஸாத் இதில் ஈடுபட்டுள்ளதா என்பது பற்றி மறுக்க இயலாது. ஆனால் குற்றவாளிகளை கைதுச் செய்தால் அவர்களை இயக்கிய சூத்திரதாரியை நிச்சயம் அடையாளம் காண்போம்" என்றார்.
செய்தி:Presstv

0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவரைக் கொன்றது மொஸாத்: பிரிட்டன்"
கருத்துரையிடுக