16 பிப்., 2010

ஹமாஸ் தலைவரைக் கொன்ற ஐரோப்பிய குற்றவாளிகளின் விபரத்தை வெளியிட்டது துபாய் போலீஸ்

துபாய்:கடந்த ஜனவரி 20 ஆம் தேதி துபாய் ரொட்டானா ஹோட்டலில் வைத்து ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹை கொன்ற கொலையாளிகளின் விபரங்களை துபாய் போலீஸ் வெளியிட்டுள்ளது.

இக்குற்றவாளிகள் மொத்தம் 11 பேர்.இவர்கள் ஐரோப்பிய பாஸ்போர்ட்டில் துபாய்க்கு வந்துள்ளனர். 6 பேர் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டிலும், 3 பேர் ஐரிஷ் பாஸ்போர்ட்டிலும், இதர இருவர் பிரான்சு மற்றும் ஜெர்மன் பாஸ்போர்ட்டுகளில் வந்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகள் விபரம் வருமாறு மெல்வின் ஆடம், ஸ்டீவன் டேனியல், மைக்கேல் லாரன்ஸ் பர்னே, ஜெமிஷ் லியனார்டு கிளார்க், ஜாண்டன் லீவிஸ் க்ரஹாம்(அனைவரும் பிரிடீஷ்), கெவின் டாஃப்ரான், கைல் ஃபோல்லர்(இவர் பெண்), இவான் டெனிகல்(அனைவரும் ஐரிஷ்), மைக்கேல் போடிங் ஹைன்னர்(ஜெர்மனி), பீட்டர் எலெவன்சர்(பிரான்சு).
துபாய் போலீஸ் தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் தாஹி கல்ஃபான் தமீம் பத்திரிகையாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார். "சந்தேகமின்றி நிச்சயமாக இக்குற்றவாளிகள் ஐரோப்பிய பாஸ்போர்ட்டுகளிலேயே துபாய் வந்துள்ளனர்.
வருத்தத்திற்குரிய ஒன்று அவர்கள் எமது நட்பு நாடுகளின் ஆவணங்களை பயணத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த குற்றவாளிகளை மேற்க்கண்ட நாடுகள் எங்களிடம் ஒப்படைக்கும் என நம்புகிறோம்.இல்லாவிட்டால் நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

ஹோட்டல் அறையிலிருந்த CCTV யில் பதிவான காட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளது.

குற்றவாளிகள் 11 பேரில் 2 பேர் வீதம் நான்கு குழுக்களாக பிரிந்து மப்ஹூஹை கண்காணித்துள்ளனர். 4 பேர் கொலைச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றவாளிகள் அறை எண் 237 ஐ பயன்படுத்தியுள்ளனர். இவ்வறை மப்ஹூஹ் தங்கியிருந்த அறைக்கு எதிர்புறமாகும். எலெவஞ்சர் என்பவர் குற்றவாளிகளை ஒருங்கிணைப்பவராக வேறு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து செயல்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் மப்ஹூஹ் துபாய்க்கு வந்த உடனேயோ அல்லது 24 மணிநேரத்திற்குள்ளாகவோ இங்கு வந்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவர் துப்புரவாளராக இருந்து யாரேனும் கொலைச் செய்யும் முன்பு வருகின்றார்களா என்று கண்காணித்துள்ளார்.ஒரு எலக்ட்ராணிக் கருவி மூலம் மப்ஹூஹின் அறையை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதுத்தொடர்பான ஃபாரன்சிக் அறிக்கைக்கு காத்திருக்கிறோம்.

குற்றவாளிகள் யு.ஏ.இ யின் சட்டத்தை வன்மையாக மீறியுள்ளனர். அவர்கள் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடிப்போம்.மேலும் கொலையை நிறைவேற்றிவுடனேயே வெவ்வேறு விமானங்களில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு தப்பிச்சென்றுவிட்டனர் குற்றவாளிகள். ஆனால் பீட்டர் என்பவர் கொலை நடக்கும் முன்பே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
குற்றவாளிகளின் பாஸ்போர்ட் விபரங்கள் இண்டர்போலிடம் ஒப்படைக்கப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்க கோரப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளின் போட்டோக்கள் மீடியாக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நிச்சயமாக குற்றவாளிகள் மப்ஹுஹின் உள்பாதுகாப்பில் நுழைந்துள்ளனர். மேலும் அவரது அசைவுகளும் கசிந்துள்ளது".இவ்வாறு தமீம் தெரிவித்தார்.

மேலும் இக்கொலையில் மொசாதின் பங்கும் மறுப்பதற்கில்லை. கொலைச்செய்யப்பட்ட ஹமாஸ் தலைவரின் வருகை ஆயுத கொள்முதலுக்கான பேச்சுவார்த்தை என்ற ஊகத்தை மறுத்தார் அவர்.
source:khaleej times

Gulfnews வெளியிட்ட cctvயில் பதிவான வீடியோவைக் காண இங்கு க்ளிக் செய்யவும்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவரைக் கொன்ற ஐரோப்பிய குற்றவாளிகளின் விபரத்தை வெளியிட்டது துபாய் போலீஸ்"

கருத்துரையிடுக