புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநில கமிட்டி புனேவில் ஒசோ ஆஸ்ரமம் அருகிலிலுள்ள பேக்கரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும், இத்தகைய கொடும் செயலை செய்த உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளது.
இதுத்தொடர்பாக மஹாரஷ்ட்ரா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஸாதிக் குரைஷி தெரிவிக்கையில், "தொடர் குண்டுவெடிப்புகள் மீண்டு நிகழ்ந்துள்ளதற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். இக்குண்டுவெடிப்புகள் மூலம் நாட்டிலிலுள்ள தீய சக்திகள் தூங்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தக் குண்டுவெடிப்பிற்கு பிறகு சில பாரபட்சமான அதிகாரிகளும், பாஷிச ஆதரவு ஊடகங்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது பழியைப் போடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.ஆனால் சமீபத்தில் மலேகான், கோவா குண்டுவெடிப்புத் தொடர்பாக சங்க்பரிவார அமைப்புகளான சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத் ஆகிய இயக்கத்தின் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டனர். இதனை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஹைதராபாத்தில் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத முத்திரைக் குத்தி கைதுச்செய்துவிட்டு பின்னர் ஓராண்டு கழித்து அவர்களை குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்டனர். இந்த ஓராண்டு காலமும் அவர்கள் உடல் மனரீதியான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். பாரபட்சமான நீதி இனியும் தொடரக்கூடாது.
புனே குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணை முறையாக நடக்காவிட்டால் மேலும் அப்பாவி இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டால் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்கள் அடுத்த தாக்குதலுக்கும் தயாராவார்கள்.
குற்றவாளிகள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும் குற்றவாளிகளே. பாரபட்சமற்ற அப்பாவிகளை தொந்தரவுச் செய்யாத நீதியான மற்றும் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும். இது தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைத்தரும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்திய குடிமக்கள் அனைவரும் ஒற்றுமையையும், தேசிய ஒருமைப்பாட்டையும் பற்றிப் பிடித்து சமூகங்களிடையே நல்லிணக்கம் நிலவ வழிவகுக்க வேண்டும் எனக் கோருகிறது.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்"
கருத்துரையிடுக