20 பிப்., 2010

மேற்கத்திய நாடுகளுக்கு ஹமாஸ் எச்சரிக்கை

துபாயில் வைத்து ஹமாஸின் ராணுவப்பிரிவின் கமாண்டரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் மொஸாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டார். இவர்கள் ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்து துபாய் வந்ததாக துபாய் புலனாய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொலையாளிகள் போலி ஆவணங்களில் பயணம்செய்துள்ளதாகவும், அவர்கள் தங்கள் நாட்டைச் சார்ந்தவர்களல்லர் என்றும் கூறியிருந்தன.

இந்நிலையில் ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் ஸஹர் நேற்று தெரிவிக்கையில், "மேற்கத்திய நாடுகள் தங்களது மண்ணில் மொசாதின் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளுக்கு ஒத்துழைத்து வருகின்றன. இவ்வாறு மேற்கத்திய நாடுகள் தங்களது மண்ணில் வைத்து ஃபலஸ்தீன் முஸ்லிம்களை கொல்வதற்கு இடம் கொடுத்தாலோ அல்லது மொஸாத் ஏஜண்டுகளை வெளிநாடுகளுக்குச் சென்று ஃபலஸ்தீன் முஸ்லிம்களை கொல்ல ஒத்துழைத்தாலோ அதனை நாங்கள் எதிர்த்து நிற்போம்" என அவர் தெரிவித்தார்.

துபாய் போலீஸ் தெரிவிக்கையில் பெரும்பாலும் மொஸாத் ஏஜண்டுகள் தான் போலி ஆவணங்களை பயன்படுத்தி இக்கொடுஞ்செயலை நிறைவேற்றியுள்ளனர், என்று கூறுகிறது.

பிரிட்டனின் M16 உளவுத்துறையைச் சார்ந்த ஒருவர் கூறுகையில், நிச்சயமாக இது மொஸாதின் வேலையாகத்தான் இருக்கும்.ஆனாலும் துல்லியமாக என்ன நடந்தது என்பதைக் குறித்து புலனாய்வு செய்துவருவதாக தெரிவித்தார்.

இஸ்ரேலிய உளவுத்துறையின் உறுப்பினர் ஒருவர், பிரிட்டன் உளவு அமைப்பான M16 மற்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகமும் போலி பிரிட்டன் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் ஆபரேசன்களை நடத்த ரகசியமாக உதவுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.ஆனால் பிரிட்டன் இதனை, முட்டாள் தனமானது என்று மறுத்திருந்தது.
Source:presstv


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்கத்திய நாடுகளுக்கு ஹமாஸ் எச்சரிக்கை"

கருத்துரையிடுக