ஒரு சமூகம் அனைத்து துறைகளிலும் வலிமைப்பெறுதலின் மூலமாகவே இவ்வுலகில் கண்ணியத்தையும்,உரிமைகளையும் பெற்று சுமூகமான வாழ்வை மேற்க்கொள்ள இயலும்.
இவை சமூகத்தில் ஏற்படும் எழுச்சியின் மூலமாகவே சாத்தியமாகும். அவ்வெழுச்சிக்கு வித்திடும் வகையில் இந்திய முஸ்லிம்களை அனைத்துத்துறைகளிலும் வலிமைப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களுடன் கைக்கோர்த்து தொலைநோக்கு பார்வையுடன் ஒரு புதிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் சமூக முன்னோடி இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக மண்ணில் மாபெரும் சமூக எழுச்சி மாநாட்டை இன்ஷா அல்லாஹ் இன்றும், நாளையும் (பிப்ருவரி 20,21) நடத்தவிருக்கிறது.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு சமூக எழுச்சியில் உங்களின் பங்களிப்பை உறுதிச்செய்யுமாறு பாலைவனத்தூது சார்பாக அன்புடன் கோருகிறோம். வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் இம்மாநாடு எந்தவித பிரச்சனைகளுமின்றி சிறப்பாக நடைபெறவும், சமூக எழுச்சியின் நோக்கத்தை அடையவும் துஆச்செய்யுமாறும், நீங்கள் பங்கெடுக்காவிட்டாலும் தாயகத்தில் வாழும் உங்கள் குடும்பத்தாரையும், உற்றார்,உறவினர்,நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளவர்களையும் பங்கெடுக்கச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இம்மாநாடு இணையதளத்திலும் நேரடியாக ஓளிபரப்பாகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பாலைவனத்தூது
0 கருத்துகள்: on "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாடு இன்று துவக்கம்"
கருத்துரையிடுக