20 பிப்., 2010

புர்காவை தொடர்ந்து 'ஹலால்' உணவுக்கும் பிரான்ஸில் எதிர்ப்பு!

பாரிஸ்: பிரான்சில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது 'ஹலால்' உணவகங்களும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் அங்கிளான புர்கா போன்றவற்றை அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளது.

இந் நிலையில், இஸ்லாமிய பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் பிரபல செயின் ஹோட்டல் ஒன்று தங்களின் ஹோட்டல்களில் 'ஹலால்' அசைவ உணவு மட்டுமே விற்று வருவதை பிரச்சனையாக்கியுள்ளது ஒரு பிரான்ஸ் கட்சி.

வரும் மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் மாகாணத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் பிரான்ஸ் வலதுசாரிக் கட்சி தலைவரான மரைன் லீ பென் திடீரென இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

ஹலால் உணவை மட்டுமே விற்போம் என்று உணவகங்கள் தங்களுக்கு மதச் சாயம் பூசிக் கொள்வது ஜனநாயக சமூகத்துக்கு விரோதமானது என்றும், இந்த உணவகங்களில் வாடிக்கையாளர்களிடமும் இஸ்லாமிய வரி வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புர்காவை தொடர்ந்து 'ஹலால்' உணவுக்கும் பிரான்ஸில் எதிர்ப்பு!"

கருத்துரையிடுக