கடலூர் : மிலாடி நபியையொட்டி வரும் 27ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வரும் 27ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி (மிலாடி நபி) அன்றைய தினம் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் அனைத்து சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதனை மீறி எவரேனும் கடையை திறந்து வைத்திருந்தால் கடை மேற் பார்வையாளர் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் புதுச்சேரியிலும் மிலாது நபி தினத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என புதுவை கலால் துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் மிலாது நபி தினம் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில் உள்ள கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் உணவகங்கள் மூடப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
source:inneram
0 கருத்துகள்: on "மீலாது தினத்தன்று மதுக்கடைகளை மூட உத்தரவு!"
கருத்துரையிடுக