28 பிப்., 2010

சுவிட்சர்லாந்திர்கெதிராக கடாஃபியின் அறப்போர் பிரகடனம்: ஐ.நா வும், ஐரோப்பிய யூனியனும் எதிர்ப்பு

ஜெனீவா:சுவிட்சர்லாந்தில் அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் மினாராக்கள் கட்டுவதற்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 200 மஸ்ஜிதுகள் உள்ளன. சுவிட்சர்லாந்தின் இத்தகைய அநியாய சட்டத்திற்கு வாடிகன் உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவுச் செய்திருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் லிபியாவின் தலைநகர் திரிபோலியில் பென்காஸி சதுக்கத்தில் நடைபெற்ற நபிகளாரின் பிறந்த நாள் பேரணியில் உரையாற்றும் பொழுது லிபியா அதிபர் முஅம்மர் கடாஃபி சுவிட்சர்லாந்திற்கெதிராக எல்லாவிதமான அறப்போரையும் பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார். இஸ்லாம் விரோத நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் நாட்டுடன் உறவை மேற்க்கொள்ளும் நபர் மதவிரோதி என்றும் அவர் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் எதிரி என்றும் கடாஃபி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கெதிராகத்தான் ஐ.நாவும், ஐரோப்பிய யூனியனும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடாஃபியின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் அவை கண்டனத்திற்குரியது என்றும் ஐ.நாவின் டைரக்டர் ஸெர்ஜி ஒர்தோணிகிஸி தெரிவித்துள்ளார்.

கடாஃபியின் அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது என்று ஐரோப்பியன் யூனியன் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையே தூதரக உறவை மேம்படுத்துவதற்காக முயற்சிகள் நடப்பதற்கிடையில் இம்மாதிரியான அறிவிப்புகள் விபரீதமாக மாறும் என ஐரோப்பியன் யூனியன் வெளியுறவுத்துறை தலைவர் காதரின் அஷ்டன் கூறுகிறார்.

கடாஃபியின் அறப்போர் பிரகடனத்தை பிரான்சு கண்டித்துள்ளது. கடாஃபியின் இவ்வறிக்கை வருத்தத்திற்குரியது என்றுக் கூறிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஐரோப்பியன் யூனியனின் கருத்துக்கு ஆதரவுத் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுவிட்சர்லாந்திர்கெதிராக கடாஃபியின் அறப்போர் பிரகடனம்: ஐ.நா வும், ஐரோப்பிய யூனியனும் எதிர்ப்பு"

கருத்துரையிடுக