துபாய்:ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலையில் கொலையாளியின் டி.என்.ஏ மாதிரிகள் கிடைத்ததாக துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி அல் அரபியா தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளில் ஒருவரின் டி.என்.ஏ வும், பிறரின் விரல் அடையாளங்களும் கிடைத்துள்ளதாக தமீமி தெரிவித்தார். இது கொலையாளிகளை அடையாளம் காண்பதற்கான தெளிவான ஆதாரம் என்றும் அவர் தெரிவித்தார்.
மொத்தம் 26 பேர் இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே துபாய் போலீஸ் தெரிவித்திருந்தது. முதலில் கண்டறியப்பட்ட 11 பேருக்கெதிராக இண்டர்போல் ரெட் அலர்ட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி துபாய் ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கொல்லப்பட்ட மப்ஹூஹ் கொலைக்கு காரணம் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொஸாத் என்று துபாய் போலீஸ் கூறியிருந்தது. போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி கொலையாளிகள் நாட்டில் பிரவேசித்ததாக போலீஸ் கண்டறிந்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மப்ஹூஹ் கொலை: கொலையாளியின் டி.என்.ஏ மாதிரி கிடைத்ததாக துபாய் போலீஸ் தகவல்"
கருத்துரையிடுக