டெல்அவீவ்: ஈரான் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனங்களான மொஸாத்- சி.ஐ.ஏ தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அணுசக்தி திட்டத்தைப் பற்றித்தான் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு வருகைப்புரிந்த லியோன் பானெட்டா இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், மொஸாத் தலைவர் ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு வருகிற மே மாதம் நடத்த வேண்டியதுதாகும். ஆனால் மேற்காசியாவில் மீண்டும் ஒரு ராணுவ தாக்குதல் நடக்கப்போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியான சூழலில்தான் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கடந்த சில தினங்களாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் இப்பகுதியில் மோதலுக்கான சூழலை உருவாக்கி வருகின்றன. சமீபத்தில் லெபனான் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வுடன் ஒரு போர் என்பது தவிர்க்க இயலாதது என இஸ்ரேல் காபினட் அமைச்சர் யோஸி பெலித் கூறியிருந்தார்.
ஜனவரி 20 ஆம் தேதி துபாயில் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலைச் செய்யப்பட்டதற்கு காரணம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஹமாஸும் கொலைக்கு பின்னணியிலிலுள்ள மொஸாதின் பங்கைக் குறித்த ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாக அறிவித்திருந்தது. துருக்கி நாட்டின் அங்காராவில் ராணுவத்தளத்தில் நூதன எலக்ட்ரானிக்ஸ் மானிட்டரிங் ஸ்டேசனை பயன்படுத்தி இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணித்து வருவதாக துருக்கி ஆளுங்கட்சியின் தலைவர்கள் சிலர் ரஷ்ய பத்திரிகைகளிடம் தெரிவித்திருந்தனர்.
ஈரானுக்கெதிராக இஸ்ரேல் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக வெளிவந்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் மறுத்த போதிலும் மேற்காசியாவில் கடலோரங்களை மையமாகக் கொண்டு நடந்துவரும் ராணுவ நடவடிக்கைகளை இந்த மறுப்பிற்கு மாறுபாடாகவே உள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க, இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு"
கருத்துரையிடுக