6 பிப்., 2010

ஆஃபியா சித்தீகி குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு: பாகிஸ்தானில் பிரமாண்ட கண்டனப் பேரணி

இஸ்லாமாபாத்:அமெரிக்க ராணுவவீரனையும், எஃப்.பி.ஐ ஏஜண்டையும் கொலைச் செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த நியூரோ சயிண்டிஸ்ட் டாக்டர் ஆஃபியா சித்தீகியை குற்றவாளி என தீர்ப்புக்கூறிய அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கெதிராக பாகிஸ்தானில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஆஃபியாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவை கண்டித்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட பேரணிகள் நடைபெற்றன.

2008 ஆம் ஆண்டு கஸ்னி மாகாணத்தில் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் பொழுது வாரண்ட் ஆபீஸரின் துப்பாக்கியை பறித்து எஃப்.பி.ஐ ஏஜண்டையும், அமெரிக்க ராணுவ வீரனையும் கொலை செய்ய முயன்றார் எனக்கூறித்தான் டாக்டர் ஆஃபியா சித்தீக்கிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் அச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஆஃபியாவிற்குதான் குண்டு காயம் பட்டது. ’லேடி காயிதா’ என அமெரிக்க ஊடகங்கள் டாக்டர் ஆஃபியா சித்தீக்கியை வர்ணித்திருந்தன. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு துணிவையே ஏற்படுத்துவதாக டாக்டர் ஆஃபியா சித்தீக்கியின் சகோதரி பவுஸியா சித்தீக்கி பேரணியில் உரை நிகழ்த்தியபோது குறிப்பிட்டார்.

டாக்டர் ஆஃபியா சித்தீகியை குற்றவாளி என தீர்ப்புக்கூறிய அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆஃபியாவின் குடும்பத்துடன் சேர்ந்து விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்க்கொள்வதாக வெளியுறவுத்துறை அதிகாரி அப்துல்பாசித் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு பற்றி எரிவதற்கு டாக்டர் ஆஃபியாவின் சம்பவம் காரணமானதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃபியா சித்தீகி குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு: பாகிஸ்தானில் பிரமாண்ட கண்டனப் பேரணி"

கருத்துரையிடுக