6 பிப்., 2010

சிவசேனாவை சவ சேனாவாக்கிய ராகுல் காந்தியின் மும்பை பயணம்

மும்பை எல்லோருக்கும் சொந்தமானது என்று பால்தாக்கரேயின் மராட்டியம் மராட்டியர்கள் என்ற கூக்குரலுக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சிவசேனாவின் மிரட்டலை புறக்கணித்து நேற்று மும்பையில் சர்வசாதாரணமாக சுற்றுப்பயணத்தை மேற்க்கொண்டது சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா ஆகியவற்றை பெரும் சரிவுக்குள்ளாக்கி விட்டது.

கிட்டதட்ட நான்கரை மணிநேரம் மும்பையில் சுற்றிய ராகுல் காந்திக்கு எந்த இடத்திலும் அவருடைய நிகழ்ச்சிக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மும்பைக்கு ஹெலிகாப்டரில் வந்த ராகுல் காந்தி, விலே பார்லே என்ற புறநகர்ப் பகுதியிலிருந்து கட்கோபர் வரைக்கும் மின்சார ரயிலில் பயணித்த அந்த சில நிமிடங்கள்தான் சிவசேனா சரிந்து போனதும், ராகுல் உயர்ந்து நின்றதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் மராத்தி அரசியலின் மையப் புள்ளியாக கருதப்படும் தாதருக்கு அவர் சென்றதும் சிவசேனாவை சவ சேனாவாக மாற்றிவிட்டது எனலாம்.

ஆக மொத்தத்தில் பெரும் அமளியில் முடியும் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படியே மாறிப் போய், ஒட்டுமொத்த மும்பை மக்களின் ஆதரவையும் அப்படியே சம்பாதிதது விட்டார் ராகுல்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிவசேனாவை சவ சேனாவாக்கிய ராகுல் காந்தியின் மும்பை பயணம்"

கருத்துரையிடுக