பெங்களூரு:இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிய மத்திய அரசின் நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
இந்தத்தடை நீட்டிப்பு அரசியல் சட்டம் வழங்கும் ஒன்றுகூடி செயல்படுவதற்கான உரிமையில் அத்துமீறலும், முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக சட்டத்தை தவறாக பயன்படுத்துதலின் தொடர்ச்சியுமாகும்.
சிமி உறுப்பினர்களுக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள புதிய வழக்குகளும், டெல்லி, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுத்தான் 2001 இல் ஏற்படுத்தப்பட்ட சிமிக்கெதிரான தடையை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையிலடைக்கப்பட்டுள்ள சில சிமி உறுப்பினர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள பழைய குற்றங்களும் தடையை நீட்டிப்பதற்கான உத்தரவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கோபுரத்தாக்குதலைத் தொடர்ந்து நிரூபிக்கப்படாத சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து தான் 1967 ஆம் ஆண்டிற்கான சட்டவிரோத நடவடிக்கைகள்(தடை) சட்டத்தின்படி அன்றைய பா.ஜ.க அரசு சிமியை தடைச்செய்தது.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றவுடன் நிலைமைகள் மாறும் என்ற நம்பிக்கைக்கு எதிராக ஐந்தாவது முறையும் சிமிக்கு தடையை நீட்டிப்புச் செய்ததுடன் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான அவதூறான குற்றச்சாட்டு தொடரவும் செய்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள்(தடை) சட்டத்தின் பிரிவின் படி நியமிக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான ட்ரிப்யூனல்(தீர்ப்பாயம்) 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சிமி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2007 ஆம் ஆண்டு பெப்ருவரியில் சிமி மீதான தடைக்கு மத்திய அரசும், உளவுத்துறையும் முன்வைத்த காரணங்களுக்கு உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என ட்ரிபியூனல் சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் மத்திய அரசு அவசர அவசரமாக சுப்ரீம் கோர்ட்டை நாடி ட்ரிப்யூனலின் தீர்ப்புக்கெதிராக தடை வாங்கியது. சிமி மீதான தடைக்கு எதிரான மனுக்கள் மீது வாதத்தை கேட்கவோ இறுதி முடிவை அறிவிக்கவோ சுப்ரீம் கோர்ட் செய்யவில்லை. அது மட்டுமல்ல சிமி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பல வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை ஆதாரம் இல்லாதததால் விடுதலைச் செய்துள்ளது நீதிமன்றம்.
சிமிக்கெதிராக தடையை நீட்டிப்புச்செய்தது முன்னரே திட்டமிட்டதும், மிக பாரபட்சமானதுமாகும். கடந்த 9 ஆண்டுகளாக நிகழ்வதுபோல் அரசு அதிகாரத்திலிலுள்ள மதவாத-பாசிச சக்திகள் சிமி மீதான தடையை முஸ்லிம் இளைஞர்களுக்கு தொந்தரவு கொடுத்து பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.
சுப்ரீம் கோர்ட்டிலிருந்து இறுதி தீர்ப்பை நோக்கி காத்திருக்கும் ஒரு அமைப்பு சட்டத்தின் பெயரால் மீண்டும் வேட்டையாடப்பட்டுள்ளது. சிமி மீதான தடையை நீட்டிப்பு செய்திருப்பது இந்தியாவின் நீதி கட்டமைப்பின் நீதியை நிலைநாட்டுவதன் பொறுப்பு தொடர்பாக கடுமையான பல கேள்விகளையும் எழுப்புகிறது. மத்திய அரசு உடனடியாக சிமி மீதான தடையை நீக்கவேண்டும். சிமித்தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உடனே தீர்ப்புகள் வழங்கப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை கோருகிறோம்.
ஒன்றுகூடி செயல்படுவதற்கான உரிமை மறுக்கப்படுவதற்கெதிராக நல்லெண்ணம் கொண்ட அனைத்து பிரிவினரும் குரல் எழுப்பவேண்டும். இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. இவ்வறிக்கையினை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயலாளர் ஒ.எம்.எ.ஸலாம் வெளியிட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிமி மீதான தடை நீட்டிப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்"
கருத்துரையிடுக