பெய்ரூத்:இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தலை சந்திப்பதற்கு லெபனான் பிரதமர் ஸஅத் ஹரீரி சர்வதேச நாடுகளின் உதவியை கோருகிறார்.
கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் லெபனானின் வான் எல்லையை பலமுறை மீறியுள்ளது என்பதை ஹரீரி சுட்டிக்காட்டுகிறார். எந்நேரமும் இஸ்ரேலின் அச்சுறுத்தல் குறித்து சர்வதேச சமூகம் விழிப்புணர்வு பெறவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானில் தற்காப்பு போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்விற்கெதிராக இன்னொரு தாக்குதல் தவிர்க்க இயலாதது என இஸ்ரேல் அமைச்சர் யோஸி பெலத் நேற்றுமுன் தினம் கூறியிருந்தார்.
லெபனானில் மதரீதியாக பிளவு ஏற்படுத்தும் இஸ்ரேல் முயற்சி தோல்வியுறும் என ஹரீரி மேலும் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாஹ்வை அழித்தொழிக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய 33 நாட்கள் நீண்ட தாக்குதல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கெதிராக ஹரீரி உதவி தேடுகிறார்"
கருத்துரையிடுக