காபூல்:நேட்டோ ஆக்கிரமிப்பு படையினர் நடத்தும் ஆபரேசன் முஷ்தரக்கிற்கு எதிராக தலிபான்கள் தங்களது தற்காப்புப் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
நேட்டோ ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிராக தலிபான்கள் ராக்கெட்டுகளும், கிரேனேடுகளும் பயன்படுத்தி போராளிகள் தாக்குதல் நடத்தியதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
மர்ஜாவில் சில இடங்களில் கடும் போராட்டம் நிலவுவதாக ஆப்கான் ராணுவ செய்தித் தொடர்பாளர் குலாம் முஹியுத்தீன் கூறுகிறார். இப்பிரதேசத்திலிருந்து 1000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் அவர்கள் லஷ் கர்காகில் தங்க வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கண்ணிவெடி பீதியுள்ளதால் மர்ஜாவிலும் அதனையடுத்துள்ள நாத் அலியிலும் நேட்டோ படையினருக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு முன்னேற இயலவில்லை. கண்ணிவெடிகளை செயல் இழக்கச்செய்யும் வாகனங்களுக்கு எதிராகத்தான் நேற்று தாக்குதல் நடைபெற்றது.
அதேவேளையில் நேட்டோ ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலிருந்து தந்திரமான முறையில் விலகி நிற்கின்றனர் தலிபான்கள். ஆனாலும் மர்ஜாவில் ஒரு கடைவீதியை கைப்பற்றும் முயற்சியை தற்காப்பு போராட்டத்தைத் தொடர்ந்து நேட்டோ ஆக்கிரமிப்புப் படையினர் கைவிட்டனர்.
இதற்கிடையே மர்ஜாவில் துயரத்தை விளைவிக்கும் நேட்டோ ஆக்கிரமிப்புப் படையினரின் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த பழங்குடி மக்கள் தலைவர்கள் 34 பேர் அம்மாகாண கவர்னருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நான்கு தினங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் 21 தலிபான்களும், ஏழு நேட்டோ ஆக்கிரமிப்பு படையினரும் கொல்லப்பட்டனர். 15 ஆயிரம் நேட்டோ ஆக்கிரமிப்பு படையினர் போராளிகளுக் கெதிரான ஆபரேசன் முஷ்தரக்கில் பங்கேற்கின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மர்ஜாவில் கடும் போராட்டம், குடிமக்கள் இடம் பெயர்கின்றனர்"
கருத்துரையிடுக