மும்பை:பிரபல வழக்கறிஞரும் மலேகான்,மும்பை ரெயில் குண்டு வெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்காக வழக்கை எடுத்து நடத்தி வந்த ஷாஹி ஆஸ்மி கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிருந்தார்.
இக்கொலைத் தொடர்பாக 3 நபர்கள் போலீசில் சிக்கியுள்ளதாக மும்பை குற்றவியல் துணைக்கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் கைதுச் செய்துள்ள மூன்றுபேரின் பெயர்கள் தேவேந்திர பாபுராவ் ஜக்தாப்(வயது 28), பிண்டு தீந்திர தக்லே(வயது 25), வினோத் யஷ்வந்த்(வயது 32) ஆகியோராவர். இவர்கள் கூலிக்காக கொலைச் செய்பவர்கள் என ராகேஷ் மரியா தெரிவித்தார்.
மரியா மேலும் கூறுகையில், "ஆஸ்மியை கொல்வதற்கான ஒப்பந்தம் பாரத் நேபாளி மற்றும் விஜய் ஷெட்டி என்ற பாலா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாலா நேபாளி 17 முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் பங்குள்ளவர். மேலும் இவர் தலைமறைவாக உள்ள நிழலுக தாதா சோட்டா ராஜனின் கும்பலில் முன்பிருந்தவர். ஆஸ்மியை இவர்கள் எதற்காக கொன்றனர் என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. விதேத் என்பவர் பாலா நேபாளிக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தியவர்.
விதேத் பிப்ரவரி 6க்கும் 11க்கும் இடையே இருமுறை ஆஸ்மியின் அலுவலகத்தை நோட்டமிட்டுள்ளார். ஒப்பந்த பணத்தை நேபாளியிடம் பெற்று ஜக்தாபிடம் ஒப்படைத்துள்ளார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜக்தாபும், சோலங்கியும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள். ஆனால் விதேத் மீது எந்தவொரு குற்றமும் இதுவரை பதிவாகவில்லை ஆனால் அவர் நரிமன் பாயிண்டில் ஒரு கம்பெனியில் டேட்டா ப்ராஸஸிங் சூப்பர்வைஸராக பணியாற்றியுள்ளார். போலீஸ் இரண்டு 7.62mm பிஸ்டல்களையும், மொபைல் போன்களையும் கைப்பற்றியுள்ளது. கைதுச் செய்யப்பட்டவர்களை மஹாராஷ்ட்ரா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைதுச் செய்வதுக் குறித்து காவல்துறை ஆலோசித்துவருகிறது.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "ஷாஹித் ஆஸ்மி கொலை வழக்கு: மூன்றுபேர் கைது"
கருத்துரையிடுக