8 பிப்., 2010

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஆந்திர மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து சில அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனவும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தச் சட்டப்படி இடஒதுக்கீடு பெற்றது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்வது மூன்றாவது முறையாகும். 2004-ல் ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியபோது, உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

அதன்பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றிமைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டுவதாகக் கூறி இந்த இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை ரத்து செய்தது.

இதன்பிறகு மொத்த இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்குள் அடக்கும்படியாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த முறையும் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு"

கருத்துரையிடுக