8 பிப்., 2010

ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என காரணம் காட்டி ஏர்ஹோஸ்டஸ் பணிக்கு புறக்கணிக்கப்பட்ட ஆதிதிராவிட பெண்கள்

சென்னை:விமானப் பணிப்பெண் வேலைக்காக அரசு சார்பில் பயிற்சி பெற்ற ஆதிதிராவிடப் பெண்களில் ஒருவர் கூட நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்குக் கூறப்பட்ட காரணம் அவர்களுக்குப் போதிய ஆங்கில அறிவு இல்லையாம்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு விமான பணிப் பெண் (ஏர் ஹோஸ்டஸ்) பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கியது.

இதுவரை மொத்தம் சுமார் 200 பெண்கள் பயிற்சி பெற்றுள்ள இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு மொத்தம் ரூ.1 கோடியை அரசு செலவிட்டது. தனியார் ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனால், இப்பயிற்சி முடித்த பெண்கள் ஒருவருக்கும் இதுவரை விமானப் பணிப்பெண் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பயிற்சி பெற்ற பெண்கள் இதுபற்றி கூறுகையில், 'நாங்கள் கறுப்பாக, குட்டையாக இருக்கிறோம். அழகாக இல்லை. எனவேதான் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியானால் எங்களை ஏன் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தார்கள்' என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஆனால் பயிற்சி பெற்ற பெண்களுக்கு தகவல் தொடர்பில் எதிர்பார்த்த அளவுக்கு திறன் இல்லாத காரணத்தாலேயே வேலை கிடைக்கவில்லை என தனியார் விமான சேவை நிறுவன அதிகாரிகள் காரணம் கூறுகிறார்கள்.

இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கூறும்போது, `பயிற்சி முடிக்கும் பெண்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் பேருக்காவது வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்தான் பயிற்சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி விட்டார்கள். தகவல் தொடர்பு திறன் சரியாக இல்லாததால் அந்த பெண்களால் நேர்முகத்தேர்வில் சரியாக பதில் சொல்ல முடியாமல் இருந்திருக்கிறார்கள். என்கிறார்.

பயிற்சியாளர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாததால் பயிற்சி கட்டணம் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம்' என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என காரணம் காட்டி ஏர்ஹோஸ்டஸ் பணிக்கு புறக்கணிக்கப்பட்ட ஆதிதிராவிட பெண்கள்"

கருத்துரையிடுக