புதுடெல்லி:குற்றச்செயல்கள், விநோதம் ஆகியவற்றைத் தொடர்புடைய செய்திகளைவிட தொலைக்காட்சி அலைவரிசைகளில் அரசியல் தொடர்பான செய்திகளில் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் செண்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்(சி.எம்.எஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆறு தேசிய சானல்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 4 வருடங்களிலிருந்து வித்தியாசமாக கடந்த 2009 ஆம் ஆண்டில் குற்றச்செயல்கள், விநோதம் தொடர்பான செய்திகள் மிகவும் குறைந்துள்ளது.
அதேவேளையில் ப்ரைம் டைமில் அரசியல் தொடர்பான செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதற்கு காரணம் கடந்த நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களாகும்.
கடந்த 5 வருடங்களாக விளையாட்டு, அதிசயம், அரசியல் ஆகியவற்றை தொடர்புடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்தாலும் இது சமீபத்தில் அரசியலுடன் சுருங்கியதாக சி.எம்.எஸ் கூறுகிறது. வளர்ச்சி சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு குறைந்த அளவு முக்கியத்துவமே அளிக்கப்படுகிறது.
ஆரோக்கியம், சுற்றுப்புறச்சூழல் சம்பந்தப்பட்ட செய்திகள் கடந்த 5 வருடங்களாக அதிகரித்துள்ளது. பன்றிக்காய்ச்சல் சம்பந்தமான செய்திகளுக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் முக்கிய இடத்தை பிடித்தன. மொத்த செய்திகளின் நேரத்தை கணக்கிடும்பொழுது 1.87 சதவீதம் ஆரோக்கியம் தொடர்பான செய்திகளாகும்.
கோபன்ஹெகன் உச்சி மாநாடும், பருவநிலை மாற்றமும் சுற்றுப்புற சூழல் சம்பந்தமான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட காரணம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தொலைக்காட்சி அலைவரிசைச் செய்திகளில் அரசியலுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக ஆய்வு"
கருத்துரையிடுக